சீரியல்களில் குடும்ப பாங்கான பெண் கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகையா இது..!! வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள்!!

தமிழில் “நாயகி” சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பாப்ரி கோஷ்.அந்த சீரியலில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவரின் அழகான நடிப்பின் மூலம் யார்ரா இந்த பொண்ணு இவ்ளோ அழகா என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவை சேர்ந்தவர்.தற்போது இவருக்கு 26 வயதே ஆகும்.

பாப்ரி கோஷ் 2009 ஆம் ஆண்டு வங்காள மொழி படமான “கால்பேலா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுவே இவரின் முதல் படமாகும்.பின்னர் படங்கள், விளம்பரங்கள் மற்றும் சீரியல் என பல துறைகளில் பணியாற்றி வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான “டூரிங் டாக்கீஸ்” படத்தில் நடித்தார்.இதைத் தொடர்ந்து விஜய்யுடன் பைரவா, சர்கார் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து சந்தானத்தின் “சக்க போடு போடு ராஜா” படத்திலும், அஜித்தின் “விஸ்வாசம்” படத்திலும் நடித்திருந்தார்.
ஆனால் படங்களில் பெரிய ரோல் எதுவும் கிடைக்காததால் சீரியல்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான
“நாயகி” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர். அதனை தொடர்ந்து “பாண்டவர் இல்லம்” என்ற சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாப்ரி கோஷ் தொழில் அதிபர் சந்தீப் என்பவரை கடந்த மாதம் 26 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். பெங்காலி முறைப்படி திருமணம் நடைபெற்றது. தற்போது இவர் “பாண்டவர் இல்லம்”, “பூவே உனக்காக”, “சித்தி 2”, “மகராசி” போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

பாப்ரி கோஷ் டூரிங் டாக்கீஸ் படத்தில் மட்டும் கவர்ச்சியாக நடித்தார்.அதன் பிறகு குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியான போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.. இதை பார்த்த ரசிகர்கள் சீரியல்களில் நடிக்கும் பாப்ரி கோஷா இது என வாயை பிளந்து வருகிறார்கள்.

Click  தீபாவளிக்கு முன்னாடியே எண்ணெய தடவீட்டு நிக்குறீங்களே!! இளசுகளை புலம்பவிடும் சூப்பர் சிங்கர் பிரகதி!!

Leave a Reply

Your email address will not be published.