தொடரும் இந்தியா சீனா பிரச்சனைகள்

கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கு தான் உரியது என உரிமை கொண்டாடும் சீனா.இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்ததே தாக்குதல்களுக்கு காரணம் என சீனர்கள் கூறுகின்றனர்.தங்களின் ராணுவம் அந்த பகுதியில்
 
தொடரும் இந்தியா சீனா பிரச்சனைகள்

கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கு தான் உரியது என உரிமை கொண்டாடும் சீனா.
இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்ததே தாக்குதல்களுக்கு காரணம் என சீனர்கள் கூறுகின்றனர்.தங்களின் ராணுவம் அந்த பகுதியில் பல்லாண்டுகளாக பாதுகாப்பு பணியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய சீனா எல்லையில் கடுமையான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா அமைதியையே விரும்புகிறது, ஆனால் தொடர்ந்து சீண்டினால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

கடந்த 1962ஆம் ஆண்டு இருந்ததைப் போன்று இந்தியர் அமைதியாக இருப்பார்கள் என்று சீனா நினைத்துவிடக்கூடாது.” என்று சீனாவுக்கு எதிராக பலர் குரல்கள் எழுப்பி வருகின்றனர். முன்னாள் அம்னெஸ்டி இந்தியா தலைவர் ஆகார் படேல் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவு ஒன்று வைரலானது.

அந்த பதிவில் அவர்,சீனா ஒரு எதிர்ப்பாளர்கள்தான். சீனாவுக்கு நிறைய குறிக்கோள்கள் உள்ளன. சீனா நம்மை உள்ளிருந்து கெடுப்பதில்லை. ஆனால் பாஜக நம்மைக் உள்ளிருந்தே கெடுக்கிறது என பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

Tags