நடிகை வனிதா விஜயகுமார் 3 ஆவது திருமணம் ! மகளின் உருக்கமான பதிவு !

சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் நியூஸ் நடிகை வனிதா விஜயகுமாரின் 3வது திருமணம் தான். இயக்குனர் பீட்டர் பாலுடன் வரும் 27ம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக வணிதாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருப்பதால் சமூகவலைதளங்களில் இதுதொடர்பான உரையாடல்கள் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் வனிதாவின் மகள் ஜோவிகா, அம்மாவின் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” அம்மா ஐ லவ் யூ. உனக்கு நான் 10000% ஆதரவாக இருக்கிறேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. உன்னை பற்றி எனக்கு தெரியும்.

நீ ஒரு கடின உழைப்பாளி, நேர்மையானவள், அருமையானவள், உற்சாகமூட்டக்கூடியவள், கருணை மிக்கவள், அன்பு தருபவள்.. நான் எப்போதும் இதை மறுக்கமாட்டேன். பிறரைப் போல் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உனக்கு தகுதி இருக்கிறது.

எல்லோருக்கும் சிலவற்றில் நம்பிக்கை இருப்பதில்லை.
எல்லோரும் அற்புதமான செயல்களை நம்புவதில்லை. அதேபோல் எல்லோரும் காதலையும் நம்புவதில்லை. ஆனால் நீ நம்புகிறாய். இதனால் அதன் பலன் உனக்கு இப்போது கிடைத்திருக்கிறது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார் ஜோவிகா.

Click  டூ பீஸ் பிகினி உடையில் மல்லாக்க படுத்து தொப்புள் குழியை காட்டும் நடிகை இலியானா..!!

Leave a Reply

Your email address will not be published.