இந்தியா சீனா இடையே போர் வந்தால் ! போர் கூட்டணி எப்படி அமையும் ? நமக்கு ஆதரவாக எந்த எந்த நாடுகள் வரும் தெரியுமா ?

இந்தியா சீனா இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் உருவாகியுள்ள நிலையில் , சீனாவுக்கு போட்டியாக ஆயுதங்களை குவித்து வருகிறது இந்தியா , இதற்க்கு முன்னர் ௧௯௬௨ ஆம் ஆண்டு இந்தியா சீனா இடையே போர் மூண்டபோது இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்காவும் , இங்கிலாந்தும் வந்தது .

இந்த ௫௦ ஆண்டுகளில் இந்தியா நிறைய நண்பர்களை சம்பாதித்துள்ளது அதே சமையம் சீனா நிறைய எதிரிகளை சம்பாதித்துள்ளது . போர் என்று ஒன்று வந்தால் நமக்கு ஆதரவாக வரும் முதல் நாடு அமெரிக்கா , ஏன் என்றால் அமெரிக்கா மற்றும் சீனா இடையே நேரடி பகை மற்றும் போட்டி நிலவி வருகிறது . எனவே சீனாவை பலவீனப்படுத்த இந்தியாவுடன் அமெரிக்கா கூட்டு சேரும்

அடுத்தது ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இந்த இரண்டு நாடுகளுமே சீனாவால் பல பிரச்சனைகளை தினமும் சந்தித்துவரும் நாடுகள் எனவே அவை இந்தியாவுக்கு ஆதரவாக வரும் , குறிப்பாக ஜப்பான் இந்தியாவின் உற்ற நண்பனாக உள்ளதால் ஜப்பான் நிச்சயம் இந்தியா சார்பு நிலையே எடுக்கும்

மேலும் தைவான் , இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவாக வரும் . ரஷ்யா , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிகளவு இந்தியாவிற்கு ஆயுதம் விற்பதால் அவை நடுநிலை வகிக்கும் அல்லது மறைமுகமாக இந்தியாவிற்கு ஆதரவளிக்கும்

காரணம் கொரோனா வைரஸால் உலகமே சீனா மீது கோவத்தில் உள்ளது அதே சமையத்தில் சீனாவுக்கு ஆதரவாக எந்த நாடுகள் இருக்கும் என்று பார்த்தல் பாகிஸ்தான் , நேபாளம் , துருக்கி உள்ளிட்ட நாடுகள் நேரடியாகவும் இலங்கை , வங்கதேசம் , இத்தாலி உள்ளிட்ட நாடுகள் மறைமுகமாகவும் ஆதரவளிக்க வாய்ப்புள்ளது

கூட்டணி என்று பார்த்தல் இந்தியா தான் பலம்வாய்ந்த கூட்டணியை உருவாக்கும் . பெரும்பாலும் சீனாவுக்கு ஆதரவாகா வரும் நாடுகள் அதனிடம் கடன் அல்லது முதலீடுகள் பெற்ற நாடுகளே . தற்போதைய சூழலில் போர் வருவதற்கான சூழல் குறைவாகவே உள்ளது .

இதுபோன்ற செய்திகளை உடனக்குடன் படிக்கச் The Public Polls என்ற நமது Facebook பக்கத்தை பின்தொடரவும்

Click  அமெரிக்கா உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ! காள்வான் தாக்குதலை ஆரம்பித்தது யார் ?

Leave a Reply

Your email address will not be published.