உயிரை மாய்துக்கொண்ட Vj சித்ரா ! அவரின் சில அறிய புகைப்படங்கள் உங்களுக்காக !

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் வருபவர் தான் வி ஜே சித்ரா.
இவர் இன்று அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படப்பிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டலில் தங்கியிருந்தார்.சித்ராக்கு ஹேமந்த் வுடன் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.ஜனவரியில் திருமணம் என கூறியிருந்தார். சித்ரா ஹேமந்த் ரவியுடன் ஹோட்டலில் ஒன்றாக தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் சித்ரா ஹேமந்த்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும் நீண்ட நேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாகவும் கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சென்று மாற்று சாவியை வாங்கி வந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Vj சித்ரா நேற்று இரவு இன்ஸ்டா கிராமில் பதிவிட்ட கடைசி புகைப்படம்

சித்ரா 1992 ஆண்டு சென்னையில் பிறந்தார். பின் தன் கல்லூரி படிப்பை சென்னை எம்.ஜி.ஆர் கல்லூரியில் முடித்தார்.பின் மீடியா மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகளை தேட தொடங்கினார்.இவர் தொகுப்பாளினியாக மக்கள் டிவியில் தனது மீடியா வாழ்க்கையை தொடங்கினார்.பின் கிடைக்கும் வாய்ப்புகளை சரியான பயன்படுத்தி கொண்டு வந்தார்.

இந்நிலையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்‌.இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் டேன்ஸ் போன்ற வற்றை செய்து வருகிறார்.இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதில் இரண்டாம் பரிசை வென்றார்.அதற்கு பின் “பாண்டியன் ஸ்டோர்” சீரியலில் நடிக்க தொடங்கினார்.

Click  ஜி.வி.பிரகாஷின் ”ஜெயில்”…. வெளியான அதிரடி டீசர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

Leave a Reply

Your email address will not be published.