நான்கு வயதில் நாடகத்தில் திருமணம்…22 ஆண்டுகளுக்கு பிறகு தம்பதிகளாக மாறிய சுவாரசியம்..!!

நம் முன்னோர்களின் கூற்றுப்படி திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்கள் என்பார்கள். கேரளாவில் ஒரு சுவாரஸ்யமான திருமணம் ஒன்று நடந்துள்ளது. கேரளாவில் 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மேடை நாடகத்தில் ஜோடியாக நடித்தவர்கள் இப்போது ரியல் ஜோடியாக கை கோர்த்து உள்ளனர்.

கேரள மாநிலத்தில் கொச்சியில் உள்ள பள்ளிக் கூடம் ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்த இருவர் ஒரே மாதத்தில் குழந்தை பெற்றனர்.இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.இவர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஸ்ரீராம், ஆர்ய ஸ்ரீ என பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.

இவர்களுக்கு நான்கு வயது இருக்கும் போது இருவரையும் ‘’ஒரு ராணுவ வீரரின் திருமணம்’’ என்ற நாடகத்தில் கணவர், மனைவியாக நடிக்க வைத்துள்ளனர்.பல ஆண்டுகள் கடந்து போனது.

இந்நிலையில் ஸ்ரீராம் ராணுவ அதிகாரி பணிக்கு தேர்வெழுதி தேர்ச்சி பெற்று ராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆர்ய ஸ்ரீயும் மருத்துவ துறையில் மருத்துவம் படித்துள்ளார்.

இதையடுத்து ஸ்ரீராம் நாடகத்தில் நடித்த தங்கள் பழைய போட்டோவை தேடி எடுத்து ஆர்ய ஸ்ரீயை தொடர்பு கொண்டார். இருவரும் நன்றாக பழகி வந்தனர்.ஸ்ரீராம் திடீரென அவரிடம் நாம் ஏன் இப்போது திருமணம் செய்து கொள்ளக் கூடாது என கேட்டுள்ளார். ஆர்ய ஸ்ரீ க்கும் ஸ்ரீராமை பிடித்து போக அவரும் சம்மதித்தார்.பின் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

Click  100 ஏக்கர் க்ளாமர் தோப்பு டா இது..!! முன்னழகில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை கனிகா!!

Leave a Reply

Your email address will not be published.