மாடர்ன் உடையில் கும்முன்னு இருக்கும் நிமிர் பட நடிகை..!! நமீதா பிரமோத்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

தமிழில் 2018 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான “நிமிர்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நமீதா பிரமோத்.


இவர் 1996 ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார்.தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை திருவனந்தபுரத்தில் முடித்தார்.
இவர் படிக்கும் போதே “வேளாங்கண்ணி மாதாவு”, “என்றெ மானச புத்ரி”, “அம்மே தேவி” போன்ற மலையாள தொடர்களில் நடித்தார்.

பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.நமீதா பிரமோத் “டிராபிக்” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து “புதிய தீரங்கலில்” படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.பின்னர் 2013 ஆண்டு மாரிஸ் குமார் இயக்கிய “என் காதல் புதிது” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஆனால் இது தாமதமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற தவறியது‌.

இந்நிலையில் 2016 ஆண்டு “சுட்டலபாய்” படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.இதையடுத்து தமிழில் “நிமிர்” படத்தில் நடித்தார்.இந்த படம் கிராமத்து கதையை சார்ந்தது.இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.பின்னர் பீமா ஜுவல்லர்ஸ், பிரான்சிஸ் ஆலுக்காஸ் மற்றும் ரிப்பிள் டீ போன்ற பல விளம்பரங்களில் நடித்து வருகிறார்.தமிழில் நிமிர் படத்தை தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவரின் ஹாட்டான புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகிறது.

Click  ஒரு நாளைக்கு ஒரு தடவதான்..? வி ஜே அஞ்சனா ரங்கன் வெளியிட்ட போட்டோ கமன்ட் செய்த நெட்டிடன்!

Leave a Reply

Your email address will not be published.