கண்ணா லட்டு தின்ன ஆசையா??விஷாகா சிங்கின் கவர்ச்சியான புகைப்படங்கள்!!!

தமிழில் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விசாகா சிங்.இவர் 1986 ஆண்டு
அபு தாபியில் பிறந்தார்.விசாகா அபுதாபி இந்திய பள்ளியிலும் டெல்லி பொது பள்ளியிலும் தனது பள்ளி படிப்பை முடித்தார்.டெல்லி பல்கலைக்கழகத்தில் இவர் தன்னுடைய வணிக துறையை கற்று பட்டம் பெற்றவர்.பின்னர் இவர் ஐரோப்பிய நாடுகளில் இயங்கிவரும் இவரது தந்தையின் நிறுவனத்தில் ஒரு நேரடி முதலாளியாக இயங்கி வருகிறார்.இவர் தந்தையின் பெயர் திரு சிதேந்திர சிங்.

இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் 2007 ஆம் ஆண்டு “ஞானபகம்” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 2008 ஆம் ஆண்டு “பிடிச்சிருக்கு” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.பின்னர் 2008 ஆம் ஆண்டு இந்தியில் “ஹும்சே ஹை ஜஹான்” படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்து வந்தார்.இந்தியில்பிரபல முன்னணி நடிகை ஆனார்.

இவர் 2009 ஆண்டு “ஹவுஸ்புல்”, “அந்தராத்மா” என்ற கன்னட படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த சந்தானம், பவர் ஸ்டார், சேதுராமன் நடித்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.பின்
இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் “மோட்டார் சைக்கிள் டையரிஸ்” என்ற மலையாள படத்திலும் அறிமுகமானார். இதுவரை இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து தமிழில் “வாலிபராஜா” என்ற படத்தில் நடித்தார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. ஆர். கண்ணனின் ஓரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.தற்போது அரண்மனை 3 பாகத்தில் நடித்து வருகிறார்.

இவர் தமிழ் திரையுலகில் தொடர்ந்து 12 வருடங்களாக நடித்து வந்தாலும் தற்போது வரை பிரபல முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.கோலிவுட் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

Click  திருமணவீட்டில் உப்புக்கருவாடு பாடலுக்கு நடனமாடும் இளம் பெண்கள் ! மெய்மறந்து பார்த்த உறவினர்கள் !

Leave a Reply

Your email address will not be published.