பிரபலமாக புதிய யுக்தியை கையாண்ட மீரா முதுன் ! முதல்வரை வம்புக்கு இழுக்கும் அவலம்

மக்களை கொரோனாவில் இருந்து மீட்க, தினமும் இரவு, பகல், பாராமல் மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என தூக்கம் இன்றி பாடுபட்டு வரும் நிலையில், தன்னை முதலமைச்சர் ஆக்கும் படி பிரதமர் மோடிக்கு மீரா மிதுன் ட்விட் செய்து டாக் செய்துள்ளதால் நெட்டிசன்கள் வழக்கம் போல் மீரா மிதுனை வச்சி செய்து வருகிறார்கள்.

தமிழக அரசு கையாலாகாத அரசு என்றும் உடனடியாக பிரதமர் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், தன்னை தமிழக முதல்வராக ஆக்கினால் ஒரே வாரத்தில் நிலைமையை சரி செய்து இயல்பு நிலைக்குக் கொண்டு வருவேன் என்று மீரா கூறியுள்ளார்.

ஒரே மாதத்தில் கிரிமினல்கள் அனைவரையும் ஜெயிலுக்குள் தள்ளுவேன் என்றும், மூன்றே மாதத்தில் தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என்று ஆறு மாதத்தில் இந்திய பொருளாதாரத்தையே மேம்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதல்வர் பணியை, திரைப்படம் போல் எண்ணி மீரா மிதுன் பேசுகிறார் என்றும், பாவம் அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா என இவர் போட்டுள்ள ட்விட்டருக்கு கதறவிட்டு வருகிறார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *