சூரரை போற்று திரைப்படத்தின் இறுதியில் பைலட்டாக வரும் பெண் யார் தெரியுமா ? நிஜத்திலும் இவர் ஒரு பைலட் தானா ! குவிவும் பாலோவர்ஸ் கலக்கும் வர்ஷா !

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் அமேசான் பிரைம்மில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி வைரலாக பேசப்பட்ட நிலையில் . அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது .

இந்நிலையில் தான் சூரரை போற்று திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பெண் பைலட் நடந்துவரும் காட்சி இடம்பெற்றிருக்கும் . அந்த காட்சியில் நடித்தவர் வர்ஷா நாயர் என்பவர் தான் . இவர் நிஜத்திலும் ஒரு பைலட் தான் .

கேரளாவை பூர்வீகமாக கொண்ட வர்ஷா நாயர் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார் . இவர் நிஜத்தில் இண்டிகோ விமானத்தில் பைலட்டாக பணியாற்றி வருகிறார் . இவர் லோகேஷ் என்பவரை திருமணம் செய்துள்ள நிலையில் . சூரரை போற்று திரைப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா கேட்டுக்கொண்டதற்கிணங்க கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருப்பார் .

படம் வெளியான நாள் முதல் இவர் யார் என்று தேடி வந்த ரசிகர்கள் வர்ஷாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர துவங்கியுள்ளனர் . மேலும் இதனால் இவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது .

மேலும் சில யூ டியூப் சேனல்களும் இவரை அழைத்து பேட்டி எடுக்க துவங்கியுள்ளனர் . மேலும் வர்ஷா ஒரு தளபதி விஜய் ரசிகை என்பதால் விஜய் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளனர் .

Click  எல்லாமே மொத்தமா தெரியுதே!!முழுவதும் காட்டிய கீர்த்தி பாண்டியன் ! ரம்யா பாண்டியன் தங்கையா இது !!

Leave a Reply

Your email address will not be published.