டிக் டாக் உள்ளிட்ட 52 சீன செயலிகளுக்கு தடை! மத்திய உளவு அமைச்சகம் அதிரடி !

இந்தியா சீனா இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் இந்தியாவில் பல சீன மொபைல் செயலிகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது . இந்த செயலிகள் மூலம் தனி நபரின் தகவல்கள் திருடப்பட்டு சீனாவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் 52 செயலிகளை கண்டறிந்துள்ள மத்திய உளவு அமைச்சகம் அவற்றின் பட்டியல் அடங்கிய முழு விவரத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது .

இதில் டிக் டாக் , யூசி பிரௌசர் , ஷேர் இட் , கிளீன் மாஸ்டர் , Xandar உள்ளிட்ட 52 செயலிகள் இந்த பட்டியலில் உள்ளது மேலும் இந்த பட்டியலில் ஜூம் செயலியும் இடப்பெற்றுள்ளது ஜூம் அமெரிக்கா நிறுவனமாக இருந்தாலும் அதன் சாப்ட்வேர் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளதால் அதை வைத்து சீனா தகவல் திருட்டில் ஈடுபடுவதாக பல நாடுகளும் குற்றம் சாட்டியுள்ளது . இதனால் ஜூம் செயலியையும் இந்த பட்டியலில் உளவு அமைச்சகம் இணைத்துள்ளது

இது தொடர்பான விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பட்டுள்ள நிலையில் கூடிய விரைவில் முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Click  இனி சீனா எல்லையில் வாலாட்ட முடியாது ! எல்லையை நோக்கி பறக்கும் ஏவுகணைகள் !

Leave a Reply

Your email address will not be published.