பயமுறுத்த நினைத்த சீனா ! சிறிதும் அசராத இந்தியா!! 1100 பணியாளர்கள் லடாக் எல்லைக்கு விரைவு ! பணிகள் தீவிரம் முழு விவரம்

கடந்த சில வாரங்களாக இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வந்த நிலையில் கடந்த வாரம் நடந்த உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை அடுத்து இரு நாட்டு
 
பயமுறுத்த நினைத்த சீனா ! சிறிதும் அசராத இந்தியா!! 1100 பணியாளர்கள் லடாக் எல்லைக்கு விரைவு ! பணிகள் தீவிரம் முழு விவரம்

கடந்த சில வாரங்களாக இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வந்த நிலையில் கடந்த வாரம் நடந்த உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை அடுத்து இரு நாட்டு படைகளும் பின்வாங்கிவந்த நிலையில் . நேற்று இரவு லடாக் பகுதியில் இரு நாட்டு வீரர்கள் இடையே சிறுமோதல் ஏற்பட்டு அது தாக்குதலாக மாறியுள்ளது .

இதில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்த நிலையில் , இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் சீன வீரர்கள் 5 பேர் உயிரிழந்ததாகவும் 11 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது

சீனா நமது எல்லையில் இப்போது இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட முக்கிய காரணமாக கூறப்படுவது எல்லையில் இந்தியா அமைக்கும் சாலைகள் ! 70 வருட இந்த சுதந்திர வரலாற்றில் கடந்த 4 ஆண்டுகளாக தான் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் இந்தியா சாலைகளை அமைத்து வருகிறது

இதற்கான முயற்சிகள் 4 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் நிலையில் 50 சதவீதம் சாலை பணிகள் முடிந்துள்ளது . குறிப்பாக சீன எல்லையில் 70 சதவீத பணிகள் முடிந்த நிலையில் 3500 கிலோமீட்டர் தொலைவுகொண்ட இந்திய சீன எல்லையில் பதற்றம் உருவானபோது கடந்த மாதம் 11,000 பணியாளர்களை ரயில் மூலம் அனுப்பி சாலை அமைக்கும் பணிகளை செய்துவந்தது இந்தியா
இன்று லடாக் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஜார்கண்டி இருந்த 1100 பணியாளர்களை ரயில் மூலம் லடாக்கிற்கு அனுப்பி சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்தியா முடிவுசெய்துள்ளது.

இந்தியா சாலை அமைக்கும் பணியை எப்படியும் தடுத்து நிறுத்த சீன முயன்றுவரும் நிலையில் அதற்க்கு சற்று அஞ்சாமல் இந்தியா சாலை அமைக்கும் பணியை விரைவு படுத்தியுள்ளது

இதுபோன்ற பல செய்திகளை படிக்க The Public Polls என்ற நமது Facebook பக்கத்தை பின்தொடரவும்

Tags