லடாக்கில் நடந்தது என்ன ? வெளியான அதிர்ச்சி தகவல் துப்பாக்கிகள் பயன்படுத்தவில்லை !ஆனாலும் நடந்த கொடூர தாக்குதல் முழு விவரம்..

கடந்த சில வாரங்களாக இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வந்த நிலையில் கடந்த வாரம் நடந்த உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை அடுத்து இரு நாட்டு படைகளும் பின்வாங்கிவந்த நிலையில் . நேற்று இரவு லடாக் பகுதியில் இரு நாட்டு வீரர்கள் இடையே சிறுமோதல் ஏற்பட்டு அது தாக்குதலாக மாறியுள்ளது .

சற்று முன் வெளியான முதற்கட்ட தகவல்களின்படி இரு நாட்டு வீரர்களும் துப்ப்பாக்கிகளை பயன்படுத்தாமல் கைகளாலும் கற்களாலும் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது . இரு நாட்டு வீரர்களும் தாக்கிக்கொண்டதில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரரமரமடைந்துள்ள நிலையில் , சீன ராணுவத்தினர் 5 பேர் பலியாகியுள்ளதாகவும் சீன பதித்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

மேலும் இந்தியா தான் எல்லை தாண்டி தங்களை தாக்கியதாக சீன ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது . மேலும் இந்த சம்பவத்தை மனதில் வைத்து இந்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று சீன வெளியுறவுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க், வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் , முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும் பல செய்திகளை உடனுக்குடன் படிக்க The Public Polls என்ற நமது FaceBook பக்கத்தை பின்தொடரவும்

Click  லடாக் எல்லையில் பதற்றம் 3 இந்தியா வீரர்கள் வீர மரணம் - அத்துமீறும் சீனா

Leave a Reply

Your email address will not be published.