ரம்பாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா !பிரபல நடிகை ரம்பா இப்போ எப்படி உள்ளார் தெரியுமா ? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் 1990 களில் இளைஞர்களின் மனதை கட்டி போட்டவர் நடிகை ரம்பா.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகை இவர். இவரை செல்லமாக “தொடை அழகி ரம்பா” என்று ரசிகர்கள் கூறுவார்கள்.தெலுங்கு திரைப்படத்தில் 1992 ஆம் ஆண்டு நடிக்க தொடங்கினார். பின்னர் 1993 ஆம் ஆண்டு இவர் “உழவன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

பின்னர் “உள்ளத்தை அள்ளித்தா”, “அருணாச்சலம்”, “ஆனந்தம்”, போன்ற பல படங்களில் நடித்தார். இவரின் “அழகிய லைலா” பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஹிட் ஆனது. ரசிகர்கள் அனைவரும் ரம்பாவின் கண்களும், புன்னகையும், கவர்ச்சியும் அவருக்கு கூடுதல் பிளஸ் என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு தொழில் அதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு நியூயார்க்கில் கணவருடன் செட்டில் ஆகி விட்டார். ரம்பாவுக்கு லாவண்யா,சாஷா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு குழந்தைகள், குடும்பம் என வெளிநாட்டில் செட்டிலான ரம்பா சமீபத்தில் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என திடீரென்று வழக்கு தொடர்ந்தார். பின்னர் அவரே வாபஸ் பெற்றார்.தற்போது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

கல்யாணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார்.ஆனால் இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களுக்கு தரிசனம் அளித்து வந்தார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக வீட்டில் இருக்கும் இவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இதை பார்த்த ரசிகர்கள் தொடை அழகி ரம்பா திரும்பி வந்துட்டாங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  முதன் முறையாக நீச்சல் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை பிரணிதா சுபாஷ்..!! லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!!

Leave a Reply

Your email address will not be published.