மீனை இந்த பொருளோடு மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள்!!!உயிரை கொள்ளும் அபாயம் எச்சரிக்கை!!

நமது முன்னோர்களின் காலம் முதலே பல உண்மைகள் இருந்தாலும் சில மூட நம்பிக்கைகளும் இருந்து வந்தன. அதில் மீனும், பாலும் ஒன்று இதை ஒரே நேரத்தில் ஒன்றாக
 
மீனை இந்த பொருளோடு மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள்!!!உயிரை கொள்ளும் அபாயம் எச்சரிக்கை!!

நமது முன்னோர்களின் காலம் முதலே பல உண்மைகள் இருந்தாலும் சில மூட நம்பிக்கைகளும் இருந்து வந்தன.

அதில் மீனும், பாலும் ஒன்று இதை ஒரே நேரத்தில் ஒன்றாக சாப்பிட்ட கூடாது என சொல்லிருந்தனர். அதாவது சில ஆரோக்கிய உணவு பொருட்களை ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று நமது முன்னோர்களால் கூறப்பட்டதால் இன்று வரை அதை நாம் பின்பற்றி வருகிறோம்.

மீனையும், பாலையும் ஏன் ஒன்றாக சாப்பிட கூடாது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம்.

அறிவியல் உண்மைகள்
அறிவியல் ரீதியாக பார்க்கும் போது மற்றும் முன்னோர்களின் கருத்துக்களை கேட்கும் போது இந்த இரண்டு பொருட்களை ஒரே நேரத்தில் ஒன்றாக சாப்பிடும் போது ஏதாவது ஒரு பொருளால் அலர்ஜி ஏற்படலாம்.இதனை தவிர்த்து பார்க்கும் போது வேறு எந்த காரணமும் இல்லை.

பாலும் மீனும் ஒன்றாக ஒரே நேரத்தில் உண்பதால் அவை உடலில் சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அதாவது அலர்ஜி அல்லது தோல் நோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஊட்டச்சத்துக்கள்
இந்த இரண்டு பொருட்களில் தனித்தனியாக பார்க்கும் போது இரண்டுமே உடலுக்கு அதிகளவில் ஊட்டச்சத்துக்களை தருகிறது. இதனால் தான் பல‌ சமயங்களில் உடல் நிலை முன்னேற்றம் அடைய இந்த இரண்டு உணவு பொருட்களை எடுத்து கொள்வர்.

எப்போது சாப்பிடக்கூடாது
மீன் நன்றாக சமைக்கப்படாமலும் அல்லது உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சனைகள் இருந்தால் இந்த இரண்டு உணவு பொருட்களையும் ஒரே நேரத்தில் சாப்பிட கூடாது.அதனை மீறி உண்பதால் உடலுக்கு அலர்ஜி சரும பிரச்சனை வயிறு கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

யார் இந்த இரண்டு உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்??
நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்கள் மட்டும் ஒரே நேரத்தில் இந்த இரண்டு உணவு பொருட்களை உண்பதை தவிர்க்க வேண்டும்.

Tags