முகப்பரு தழும்புகளை நீக்கும் இயற்கை வீட்டு வைத்தியம் வெந்தயம்!

நம்மில் பலருக்கும் முகப்பரு வராதவர்கள் யாரும் இருக்க முடியாது. முகப்பரு வந்தாலும் மறைந்தாலும் அதன் தழும்புகள் மறையாது.இந்த தழும்புகள் நம் அழகை கெடுத்து அசிங்கமான தோற்றத்தை ஏற்படுத்தும்.இந்த வெந்தயத்தின் மருத்துவம குணங்களை பற்றி இதில் பார்ப்போம்

முகப்பரு தழும்புகளை நீக்க வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. வெந்தயம் முகப்பரு தழும்பை நீக்குவதில் மிகச்சிறந்த மருந்தாகும்.

வெந்தயத்தை பயன்படுத்தும் முறை:

சுடுதண்ணீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதை அரைத்து எடுத்து கொள்ளவும். இதை தழும்புகள் மீது தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால் தழும்புகள் நீங்கும்.

வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி வருவதன் மூலம் தழும்புகள் மறையும். தினமும் தழும்புகளின் மீது வெந்தயத்தை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு தழும்புகள் மறைவதோடு மேலும் பருக்கள் வராமல் தடுக்கும்.

ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதன் பழசாற்றை பிழிந்து எடுத்து கொள்ளவும் பின் அதில் பஞ்சை நனைத்து அதை முகப்பருக்கள் மீது தடவி வந்தால் முகப்பரு தழும்புகள் நீங்கும். எலுமிச்சையும் முகப்பரு கரும்புள்ளிகளை நீக்கும் சிறந்த மருந்தாகும்.

Click  தமிழ் பெண்களின் அழகிய நடனம் ! மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள் வைரலாக வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.