காங்கேயத்தில் தண்ணீர் தொட்டிக்குள் மனித எலும்புக்கூடு ! பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் என்னும் பகுதியில் உள்ளது அப்பியபாளையம் என்னும் கிராமம் இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் நிலம் வாங்கி அதை பிளாட்டுகளாக பிரித்து விற்பனை செய்துள்ளார் அப்போது அங்கு நிலம் வாங்கி வீடு கட்டுவோரின் வசதிக்காக ஒரு உயர் தண்ணீர் தொட்டியையும் கட்டப்பட்டுள்ளது .

அந்த இடம் சற்று உள்ளே இருப்பதால் அங்கு நிலம் வாங்கிய யாரும் அங்கு வீடு கட்டவில்லை இதனால் அந்த தண்ணீர் தொட்டி உபயோகமற்று இருந்துள்ளது . இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அங்கு ஒருவர் வீடு கட்ட அடிக்கல்நாட்டியுள்ளார் . வீட்டு வேலைகளுக்காக அந்த தொட்டியில் தண்ணீர் விடலாம் என்று தொட்டியில் ஏறி பார்த்துள்ளார் அப்போது அந்த தொட்டியில் படுத்த நிலையில் ஒரு மனித எலும்புக்கும்புக்கூடு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து காங்கயம் DSP தன்ராஜ் , இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர் . அது எலும்புகூடுதான் என்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அதை தீயணைப்பு துறை ஊழியர்களின் உதவியுடன் கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்கு கோவை அனுப்பிவைத்துள்ளனர்

அந்த எலும்புக்கூட்டின் அருகே முயல் பிடிக்கும் கம்பிகள் இருந்ததால் , அங்கு முயல்பிடிக்க வந்தவர் தவறி விழுந்து இறந்தாரா இல்லை யாரேனும் அவரை கொலைசெய்து சடலத்தை தொட்டியில் வீசினார்களா என்ற கோணத்தில் ஊதியூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் . 3 ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதியில் இருந்து நாற்றம் வந்துள்ளது . எதோ விலங்கு தான் என்று அந்த பகுதி மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை . இப்போது அங்கு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் பல செய்திகளுக்கு The Public Polls என்ற நமது இணையவழி ஊடகத்தை Facebook பின் தொடருங்கள்

Click  சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட் ! கொரோனாவால் உயிர்தப்பிக்கும் சென்னை மக்கள் ! ஒருவேளை கொரோனா வரவில்லை என்றால் என்ன ஆயிருக்கும் !

Leave a Reply

Your email address will not be published.