கோரோனா வார்டில் நர்சாக பணியாற்றிய பிரபல நடிகைக்கு கோரோனா!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!
இந்தியாவில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தங்களால் இயன்ற பணிகளை அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியில் முன்னணி நடிகையாக வளம் வரும் ஷிகா மல்ஹோத்ரா கோரோனா சூழ்நிலையின் காரணமாக தொற்றுக்கு எதிராக மும்பையில் ஜோகேஸ்வரியில் உள்ள பாலாசாகேப் தாக்கரே என்ற மருத்துவமனையில் நர்சாக தன்னார்வ தொண்டு செய்து பணியாற்றி வருகிறார்.
இவர் 9 ஜுலை 1994 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு 26 வயதாகும். இவர் பிப்ரவரியில் வெளிவந்த காஞ்ச்லி படத்திலும் மற்றும் ஷாருக்கானின் ஃபேன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு டெல்லியில் வர்தமான் மகாவீர் மருத்துவ கல்லூரியில் நர்சிங் பட்டம் பெற்றவர் மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையில் நர்சிங் பட்டம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் நடிகையாக படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் இந்தியாவில் கோரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.இந்த சூழ்நிலையை பார்த்து என்னால் வீட்டில் சும்மா இருக்க முடியாது என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று வேலை கேட்டேன் அவர்களுக்கு நர்ஸ் பற்றாக்குறையின் காரணமாக தன்னை கோரோனா வார்டில் வேலைக்கு சேர்த்தனர் என்றார்.

அவரை சமுக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வந்தனர் அவரும் சமுக வலைதளங்களில் கோரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு மற்றும் இந்த கோரோனா தொற்றில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் பேசி வந்தார்.

இந்நிலையில் கோரோனா வார்டில் பணியாற்றி வந்த ஷிகா மல்ஹோத்ராக்கு தற்போது கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.