இந்த ஊரடங்கில் இந்திய மக்கள் அதிகமாக எதை தேடினார்கள் தெரியுமா ? கூகுள் வெளியிட்ட பட்டியல் ! வித்தியாசமானவர்கள் இந்தியர்கள் !

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ துவங்கிய நிலையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது இன்று வரை ஊரடங்கு தொடர்ந்துவரும் நிலையில் . இந்த ஊரடங்கில் இந்திய மக்கள் அதிகமாக எதை கூகுளில் தேடினார்கள் என்ற பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது .

அதில் ஊரடங்கின் துவக்கமான ஏப்ரல் மாதத்தில் வீட்டிலேயே பானிபூரி செய்வது எப்படி என்பதையே அதிகமாக மக்கள் தேடியுள்ளனர் . சாதாரணமாக சாலைகளில் 10,20 ரூபாய்க்கு கிடைக்கும் பானிபூரி ஊரடங்கால் கிடைக்காததால் அதை வீட்டிலேயே செய்ய மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்

இரண்டாவதாக 5 நிமிடத்தில் வீட்டிலேயே ஸ்னாக்ஸ் செய்வது எப்படி என்பதை மக்கள் அதிகமாக தேடியுள்ளனர் . மூன்றாவது இடத்தில் நமது பாரம்பரிய மருத்துவம் பிடித்துள்ளது , பாட்டி வைத்திய முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என்பதை 3 வது அதிகமாக மக்கள் தேடியுள்ளனர்

நான்காம் இடத்தை வைட்டமின் C உணவுகள் யாவை என்பதும் , ஐந்தாம் இடத்தில் சிறு கதைகளும் பிடித்துள்ளது . ஏப்ரல் மாதத்தில் இப்படி என்றால் மே மாதத்தில் லாக்டவுன் 4.0 என்ற வார்த்தை அதிகமாக தேடப்பட்டள்ளது அதை அடுத்து டல்கோண காபி , மேங்கோ ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுகள் பிடித்துள்ளது , மூன்றாம் இடத்தில் உடட்பயிற்சிகளை வீட்டிலேயே செய்வது எப்படி என்பது பிடித்துள்ளது , நான்காம் இடத்தில் பொழுதுபோக்கான சினிமாவும் , ஐந்தாம் இடத்தில் வானிலை பற்றிய தகவல்களையும் தேடியுள்ளனர்

உலகிலேயே இந்தியாவில் தான் உணவுகள் இந்த பட்டியலை ஆக்கிரமித்துள்ளது என்பது இந்த பட்டியலின் சிறப்பம்சம்

Click  எந்த ஊரு பொண்ணுமா நீ! இப்படி செம்மயா பண்ற! இணையத்தில் 85 லட்சம் பேர் பார்த்த வீடியோ ! என்ன குத்து !

Leave a Reply

Your email address will not be published.