பிரபல நகைச்சுவை நடிகர் சூரியிடம் கோடிக்கணக்கில் நடந்த மோசடி!!!ஏமாற்றியது யார் தெரியுமா???

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் சூரி. இவரின் முழுப்பெயர் சூரி முத்துசாமி இவருக்கு 43 வயதாகும். வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் அந்த படத்தில் புரோட்டா சாப்பிடும் போட்டியின் மூலம் பிரபலமாகி புரோட்டா சூரி என அழைக்கப்பட்டார்.பின் தன் நகைச்சுவை திறமையால் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தன்னிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறி போலிசாரிடம் புகார் ஒன்றினை கொடுத்துள்ளார்.

இந்த புகாரில் 2015 ஆம் ஆண்டு தான் நடித்த வீர தீர சூரன் படத்திற்கு 40 லட்சம் சம்பளம் பாக்கி இருப்பதாகவும் அந்த சம்பள பாக்கியை தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மற்றும் ரமேஷ் என்பவர் தர முடியாது எனவும் கூறியுள்ளனர். மேலும் நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் போலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

ரமேஷின் மீது புகார் கொடுத்துள்ள சூரி.இந் ரமேஷ் குடுவ்லா என்பவர் யார் தெரியுமா??? நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை இவரும் ஒரு தயாரிப்பாளர் இவர் பல படங்களை தயாரித்தும் உள்ளார்.இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் என் மீதும் என் தந்தை மீதும் பொய்யான குற்ற சாட்டுகளை வைத்துள்ளார். உண்மையில் திரு சூரி தான் விஷ்ணு விஷால் ஸ்டுடியோ க்கு அட்வான்ஸ் பணத்தை திருப்பி தர வேண்டும்.கவரிமான் பரம்பரை படத்திற்கு அந்த பணம் தந்ததாகவும் சில காரணங்களால் அந்த பணம் கைவிடப்பட்டது.சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது சட்டத்தின் பாதையில் நாங்கள் செல்வோம் என்று ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

இந்த புகாரையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click  வெளிப்படையாக காட்டும் ஈஸ்வரன் பட நடிகை ! மறைக்க மனசு இல்ல போல ! புகைப்படங்கள் உள்ளே!

Leave a Reply

Your email address will not be published.