குறைவான விலையில் கிடைக்கும் அதிக சத்துள்ள நட்ஸ் ! தினமும் அவசியம் சாப்பிடுங்கள்

விலை மலிவான 5 வகையான நட்ஸ்!!! ஹெல்த்தி நட்ஸ்

இன்றைய சூழ்நிலையில் அனைவரின் ஆரோக்கியம் மிக முக்கியம். இந்த நாகரிக வாழ்க்கையில் அனைவரும் பாரம்பரிய உணவு பொருட்களை மறந்துவிட்டு மற்ற உணவுகளை உண்கிறோம்.இந்நிலையில் அதிக சத்துள்ள 5 வகையான நட்ஸ் பற்றி பார்ப்போம்.

வேர்க்கடலை
வேர்க்கடலை ‘ஏழைகளின் பாதாம்’ என்று சொல்லப்படுகிறது.இது பாதாம் மற்றும் முந்திரியை விட அதிக சத்துள்ள உடலுக்கு நன்மை தர கூடியது.ஆனால் நம்மில் பலரும் இந்த வேர்க்கடலையை மறந்துவிட்டோம்.வேர்க்கடலையை வேகவைத்தோ அல்லது வறுத்தோ உண்ணலாம். வேர்க்கடலையுடன் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் சிறந்த ஹெல்த்தி நட்ஸ் ஆகும் . இதன் மகிமையை அறிந்த அமெரிக்கா தனது உணவு பட்டியலில் சேர்த்துள்ளது.

கொண்டைக்கடலை
கொண்டைக்கடலை உடலுக்கு
மிகவும் நன்மை தர கூடியது. கருப்பு கொண்டைக் கடலை என்றாலே அது சுண்டல் தான். அதை ஊற வைத்து முலை கட்டிய பிறகு தினமும் காலையில் உண்டு வந்தால் உடல் வலிமை பெறும்.இது இனிப்பு சுவை இல்லாமல் இருப்பதால் இதனுடன் உப்பு சேர்த்து வேக வைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம். கொண்டைக் கடலை வறுத்து பொடி செய்து நீரில் கலந்து கொதிக்க வைத்து கூட அருந்தலாம்.உப்புக்கடலை மிகவும் பிரபலமான நொறுக்கு தீனி.

சோயா பீன்ஸ்
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கிலோ கிராம் எடைக்கு ஒரு கிராம் வீதம் புரதம் தேவைப்படுகிறது அது மாமிசம் உண்ணும் போது தான் அதிகம் கிடைக்கிறது. தாவர உணவு பொருட்களில் சோயா பீன்ஸ் மட்டுமே புரதம் தருகிறது. சோயா பீன்ஸில் 40 சதவீதம் புரதம் , கால்சியம் , பி 12 மற்றும் நல்ல கோலஸ்ட்ரால் உள்ளது. சோயா பீன்ஸ் ஒரு வகையான பயிறு அதை பயிராக உண்பது தான் சரியானது.

உலர் திராட்சை
உலர் திராட்சையில் நிறைய பயன்கள் உள்ளன.இதில் நார்ச்சத்து வைட்டமின்கள் மற்றும் அதிக கலோரிகளை கொண்டுள்ளது.அளவில் சிறிதளவு இருக்கும் உலர் திராட்சை அதித சக்தியை கொண்டுள்ளது.முதுமையற்ற இளமை தோற்றம் வேண்டுமெனில் அதிக உலர் திராட்சையை எடுத்து கொள்ள வேண்டும்.
இதை அளவோடு சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தியை அதிகரிக்கும்,அசிடிட்டி குறையும், புற்றுநோய்க்கு மிக்க மருந்து தாம்பத்தியில் அதிக பலம் பெறலாம்.

Click  ஓணம் கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் ! வெளியான புகைப்படங்கள் உங்களுக்காக !

பேரிச்சை
பேரிச்சை பழத்தில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.தினமும் மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டால் வந்தால் ரத்தம் அதிகரிக்கும் மற்றும் உடல் வலிமை பெறும்.பெண்களுக்கு அதிக அளவில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து தேவைப்படுகிறது.பெண்களின் மாதவிடாயின் போது அதிக ரத்த விலக்கு ஏற்படுகிறது இதனை ஒழுங்கு படுத்த பேரிச்சம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டோர் பேரிச்சம் பழம் மற்றும் பாதாம் சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published.