நாயகி சீரியலில் குடும்ப பெண்ணாக நடிக்கும் ஆனந்தியா இது ! மாடன் உடையில் கவர்ச்சி போஸ் !
முன்னணி தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நாயகி என்ற மெகா தொடர் மிகவும் பிரபலம் . இந்த தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பெற்றவர் தான் வித்யா பிரதீப்
1995 ஆம் ஆண்டு கேரளா பிறந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான சைவம் படத்தில் தேன்மொழி என்ற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார் . அதன் பின்னர் பசங்க 2 , அச்சமின்றி , இரவுக்கு ஆயிரம் கண்கள் , மாறி 2, தடம் , பொன்மகள் வந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் .

தடம் படத்தில் இவர் நடித்த காவலர் கதாபாத்திரம் நன்கு பேசப்பட்டது . சினிமாவில் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால் சீரியல் பக்கம் நுழைந்தார் வித்யா . நாயகி தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர் குடும்ப பெண்ணாக சிறப்பாக நடித்து வருகிறார் .

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை பதிவிட்டுவருகிறார் . அதில் சில புகைப்படங்கள் வைரலாகியுள்ளது அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது .


Vidhya Pradeep latest photos

