லிவிங் டுகெதர் வாழ்க்கையால் நடந்த விபரீதம்!! பெண் மருத்துவருக்கு நடந்த சோகம்!!!

கேரள மாநிலத்தில் திருச்சூரை அடுத்த கூத்தாட்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் சோனா.தற்போது இவருக்கு 30 வயதாகும். இவர் ஒரு பல் மருத்துவர். கூட்டாநல்லூரில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.இவருக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.

இந்நிலையில் சம்பவ‌தினத்தன்று காலை சோனா கத்திக்குத்து காயங்களுடன் கிளினிக்கில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால் போகும் வழியிலேயே சோனா உயிர் பிரிந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது தன்னை கத்தியால் குத்தியது தன்னுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்த மகேஷ் என்பவர் என கூறியுள்ளார். இந்த தகவல்களை போலிசாரிடம் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து போலிசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் மகேஷ் மற்றும் சோனா இருவரும் லிவிங் டுகெதர் வாழ்ந்து வந்தவர்கள் என தெரிகிறது.பல் மருத்துவர் சோனாவிடம் அதிக பணம் இருப்பதாய் அறிந்த மகேஷ் அவருடன் நெருக்கமாக பழகி இருக்கிறார். முதலில் நண்பராக பழகி வந்த மகேஷ் பின் தன் காதல் வலையில் சோனாவை சிக்க வைத்தார். பின் இருவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து இருக்கிறார்கள்.மகேஷ் சோனாவிடம் சிறிய சிறியதாக பணம் வாங்கி இருக்கிறார்கள் மொத்தமாக 22 லட்சம் வாங்கிருக்கிறார்.ஒரு கட்டத்தில் தான் கொடுத்த பணத்தை திரும்ப மகேஷிடம் கேட்டு இருக்கிறார் இதில் இருவரும் கருத்து மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து இருவரும் பிரிந்து தனி தனியே வாழ்ந்து வந்தனர். சோனா தன் பணத்தை வாங்கி தருமாறு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். சம்பவ தினத்தன்று காலை மகேஷ் கிளினிக் சென்று சோனாவிடம் வாக்குவாதம் தடத்தியுள்ளார்.வாக்குவாதம் முற்றிய நிலையில் கத்தியால் அவரை‌ குத்தியுள்ளார்.தற்போது போலீசார் மகேஷை தேடி வருகிறார்கள்.

Click  தொடையை அப்படியே காட்டும் வலிமை பட நடிகை ஹூமா குரேஷி..!! வைரலாகும் புகைப்படங்கள் !!

Leave a Reply

Your email address will not be published.