பற்களில் உள்ள மஞ்சள் கறையை எளிதில் நீக்கி பளபளப்பான பற்களை பெறலாம் வீட்டிலேயே எளிய வழி

ஒருவரின் அழகை முகத்தில் இருக்கும் புன்னகையும் அதில் வரும் சிரிப்பும் அவர்களை வெளிக்காட்டும்.அந்த சிரிப்பிற்கு அழகு சேர்ப்பது நமது பற்கள்.அதை அழகாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பது நமது கடமை.ஆனால்
 
பற்களில் உள்ள மஞ்சள் கறையை எளிதில் நீக்கி பளபளப்பான பற்களை பெறலாம் வீட்டிலேயே எளிய வழி

ஒருவரின் அழகை முகத்தில் இருக்கும் புன்னகையும் அதில் வரும் சிரிப்பும் அவர்களை வெளிக்காட்டும்.அந்த சிரிப்பிற்கு அழகு சேர்ப்பது நமது பற்கள்.அதை அழகாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பது நமது கடமை.ஆனால் இன்று பலர் தங்களின் வாயில் பல பிரச்சனைகள் சந்திக்கிறார்கள் அதில் முக்கியமாக வாய் துர்நாற்றம் , சொத்தை பற்கள் , மஞ்சள் கரையுடன் பற்கள் போன்ற பிரச்சனைகள் உள்ளன.

நாம் தினமும் பற்களை துலக்கினாலும் சிலருக்கு பற்களில் மஞ்சள் கரை படிகிறது அதை போக்க சிலர் மருத்துவர்களை சந்திக்கிறார்கள்.ஆனால் பல் மருத்துவரிடம் செல்லாமல் வீட்டிலேயே எளிய முறையில் சரி செய்யலாம்.இந்த தொகுப்பில் இரண்டு எளிய முறைகளை பார்க்கலாம்.

எளிய முறை 1:
தேவையான பொருட்கள் :.
பேக்கிங் சோடா 2டேபுள் ஸ்பூன் , எலுமிச்சை சாறு 1டேபுள் ஸ்பூன் டூத் பேஸ்ட் 1டேபுள் ஸ்பூன் , ஆப்பிள் சீடர் வினிகர் 1டேபுள் ஸ்பூன் , தேங்காய் எண்ணெய் 1டேபுள் ஸ்பூன் , அலுமினிய தாள்.

பேக்கிங் சோடா ஆன்டி பாக்டீரியா பொருள் இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் மற்றும் பற்களை வெள்ளையாக மாற்றும். எலுமிச்சை சாறு பற்களை வெண்மையாக ப்ளீச் போன்று செயல்படும்.‌ ஆப்பிள் சீடர் வினிகரில் அமில தன்மை உள்ளதால் மஞ்சள் கரையை போக்க உதவும். தேங்காய் எண்ணெய் பற்கள் சொத்தையாவதை தடுக்கும்.
செய்முறை:
முதலில் பேக்கிங் சோடா மற்றும் டூத் பேஸ்ட் நன்றாக கலந்து கொள்ள வேண்டும் அதில் எலுமிச்சை சாறு கலந்து,ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து கொள்ள வேண்டும் பின்பு தேங்காய் எண்ணெய் கலந்து அதை அலுமினிய தாளில் எடுத்து பற்களின் மேலும் கீழும் வைக்க வேண்டும். 2நிமிடம் கழித்து நிக்கி விட்டு நீரால் வாயை நன்றாக கழுவ வேண்டும்.பின்பு விரலால் பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.ஒரு முறை இந்த கலவையை தயார் செய்தால் அன்று மட்டும் பயன் படுத்த வேண்டும்.

பற்களில் உள்ள மஞ்சள் கறையை எளிதில் நீக்கி பளபளப்பான பற்களை பெறலாம் வீட்டிலேயே எளிய வழி

எளிய முறை2:
தேவையான பொருட்கள் :
ஆரஞ்சு பழ தோள் தேவையான அளவு, பிரியாணி இலை என்று சொல்லபடும் இலை நான்கு.

Click  மெழுகு சிலை மாறி இருக்கிங்களே..!! ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள் !!

செய்முறை:
ஒரு மிக்சி ஜாரில் ஆரஞ்சு பழ தோள் , பிரியாணி இலை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கலவை போல் செய்து கொள்ள வேண்டும். ஆர‌ஞ்சு தோளில் வைட்டமின் சி மற்றும் லைட்டனிங் தன்மை உள்ளது.பிரியாணி இலையில் ப்ளீச் தன்மை உள்ளதால் பற்களை வெள்ளையாக மாற்றும்.அந்த கலவையை கொண்டு பற்களை துலக்கி பின்பு சுடு நீரில் வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும்.பின் டூத் பேஸ்ட் கொண்டு பற்களை துலக்க வேண்டும்.தினமும் இதை செய்து பாருங்கள் பற்களின் மஞ்சள் கரை நீங்கி வெண்மையாக மாறி விடும்.

Tags