ஊதா என்றால் சும்மா நினைக்காதீங்க? மற்ற உணவை விட இதில் தான் சக்தி அதிகம்!

மற்ற நாட்டு உணவு முறைகளை விட, நம் நாட்டு உணவு முறை மிகவும் சிறந்ததாகும். நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும், ஒரு மருத்துவகுணம் நிறைந்து காணப்படுகிறது. இதுகுறித்து நாம் அறியாத பல விஷயங்கள் உள்ளன. அந்த வகையில், மற்ற உணவுப்பொருட்களை காட்டிலும், ஊதா நிறத்தில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்களுக்கு தனி விதமான சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஊதா நிற காய்கறிகள் அல்லது பழங்கள் கொலஸ்ட்ரால், செரிமான கோளாறு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல வியாதிகளுக்கு தீர்வு தருகிறது என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். அதன்படி, ஊதா நிறத்தில் இருக்கக்கூடிய கத்தரிக்காயில் வைட்டமின் கே, சி, பி6, நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இது கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதளவில் உதவுகிறது.

அதே போல, நாவல் பழத்துக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடிய சக்தி உண்டு. நாள்தோறும், நாவல் பழம் சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாகும். அதே  போல் வெங்காயத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக அதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதயம் சார்ந்த நோய்களை தடுக்க கூடியது. ஊதா நிறத்தில் இருக்கக்கூடிய திராட்சைப்பழம், செரிமான கோளாறு தீர்க்கக் கூடியது. எனவே இனி ஊதா நிற காய்கறிகள் அல்லது பழங்களை அதிகமாக தேர்வு செய்து சாப்பிடுங்கள் அதுவே உடல் நலத்திற்கு நல்லது.

Click  பார்லெஜி பிஸ்கெடின் சாதனை

Leave a Reply

Your email address will not be published.