சூர்யவம்சம் படத்தில் நடித்த இவர் யார் என்று தெரியுமா ? இப்போது மிகவும் பிரபலமான சீரியல் நடிகை ! இவரா இது !!!

1997 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் சூர்யவம்சம் . இதில் சரத்குமார் , ராதிகா , தேவயானி , மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள் . அதிலும் குறிப்பாக சரத்குமாரின் அத்தை மகள் கதாபாத்திரத்தில் பிரியா ராமன் நடித்திருப்பார் .

சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார் . அதுவும் சரத்குமாரிடம் “படித்த நான் எங்க படிக்காத நீ எங்க” என்று கேற்கும் காட்சி இன்றும் பலவகை மீம் களாக பரவிவருகிறது . அந்த கதாபாத்திரத்தில் நடித்த பிரியா ராமன் யார் தெரியுமா ?

இப்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் . செம்பருத்தி தொடரின் மிக முக்கிய கதாபாத்திரமான அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடிப்பது சூர்யவம்சம் படத்தில் கௌரியாக நடித்த பிரியா ராமன் தான் .

1978 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1993 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார் . அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சீரியல் பக்கம் வந்த பிரியா 2000 ஆம் ஆண்டு முதல் மலையாளம் மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார் . இப்போது இவர் நடித்துவரும் செம்பருத்தி சீரியலின் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்துள்ளது

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  முதல் முறையாக பிகினி உடையில் மொத்தமாக காட்டி வீடியோ வெளியிட்ட நடிகை ஸ்ரேயா ! வைரல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.