“இன்று நேற்று நாளை” பட நடிகைக்கு நடந்து முடிந்த திருமணம் ! மணமகன் யார் என்று தெரியுமா ? வெளியான புகைப்படங்கள் !

கடந்த 1992 ஆம் ஆண்டு பிறந்தவர் மியா ஜார்ஜ் .  2010 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமான இவர் 2014 ஆம் ஆண்டு “அமர காவியம்” என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார் அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலுடன் இணைத்து “இன்று நேற்று நாளை” படத்தில் நடித்தார் . அந்த படம் வெற்றிபெற்ற  நிலையில்.

2016 ஆம் ஆண்டு “ஒரு நாள் கூத்து” , “வெற்றிவேல்” உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார் இந்த இரண்டு படங்களும் மியாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது . அதன்பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் . இப்போது தமிழிலும் “கோப்ரா” என்ற படத்தில் நடித்துவருகிறார் மியா ஜார்ஜ் .

இந்நிலையில் தான் கடந்த மாதம் 25 ஆம் தேதி இவருக்கும் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது . நேற்று கேரளாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் அஸ்வின் மியாவின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்துள்ளது .
கொரோனா அச்சம் காரணமாக வெறும் 50 பேர் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றுள்ளனர் .

மியா ஜார்ஜ் மற்றும் அஸ்வின் திருமண புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது அந்த படங்கள்

Mia grorge marrage photos

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *