ஐபிஎல் தொடரில் 8 அணிகளுக்கும் ஆடிய வீரர் யார் தெரியுமா ? இந்த ஆண்டும் ஆடுகிறார் !

இந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது . இந்நிலையில் வரும் 19 ஆம் தேதி மீண்டும் துவங்கவுள்ளது . ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் தொடருக்காக அணைத்து அணிகளும் துபாய் சென்றுள்ள நிலையில் .

இதுவரை கோப்பையை கைப்பற்றதா விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றும் நோக்கில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஆரோன் பின்ச் மற்றும் சவுத் ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் கிர்ஸ் மோரிஸ் உள்ளிட்டோரை ஏலத்தில் எடுத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் பெங்களூரு அணியினர் .

குறிப்பாக ஆரோன் பின்ச் இப்போது நல்ல பார்மில் உள்ளார் . அவர் இந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு ஆடுவது அந்த அணிக்கும் கூடுதல் பலமாக அமைந்துள்ளது . இது ஆரோன் பின்ச்சின் 8 ஆவது ஐபிஎல் அணி . ஆம் இதுவரை 7 ஐபிஎல் அணிகளுக்கு விளையாடி , அதிக ஐபிஎல் அணிகளுக்காக விளையாடிய வீரர் என்ற பெயரை பெற்ற பின்ச் இப்போது 8 ஆவது அணிக்கு ஐபிஎல் ஆடவுள்ளார் .

2010 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவரும் பின்ச் 2010 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார் . 2011,2012 ஆம் ஆண்டுகளில் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காகவும் . 2013 ஆம் ஆண்டு பூனே வாரியர்ஸ் அணிக்காகவும் விளையாடினார் .

பின்னர் 2014 ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதிராபாத் அணிக்காக விளையாடிய இவர் . 2015 – மும்பை இந்தியன்ஸ் , 2016,2017 – குஜராத் லயன்ஸ் , 2018 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடினார் . இப்போது 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடவுள்ளார் .

பின்ச் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக மட்டுமே விளையாடியதில்லை . ஆரோன் பின்ச்சுக்கு இப்போது 33 வயதாகும் நிலையில் இவர் ஓய்வுபெறுவதற்குள் இந்த இரண்டு அணிகளிலும் விளையாடி 10 ஐபிஎல் அணிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற பெயரை பெற்றாலும் ஆச்சர்யமில்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *