ஓய்வை அறிவித்த கவின் ! கடுப்பான தோனி ரசிகர்கள் ! அப்படி என்ன செய்தார் கவின் ?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூன்றாவது சீசனில் பங்கேற்றவர் நடிகர் கவின் . அதே நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்ற லாஸ்லியாவும் கவினும் காதலித்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர்களது காதல் நிலைக்கவில்லை .

கவினுக்கு பெரிய படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் லாஸ்லியாவுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் வருவதால் அவர் தொடர்ந்து முன்னேறிவருகிறார் . இந்நிலையில் தான் தோனி ஓய்வை அறிவித்ததுபோலவே ” உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கு நன்றி 20:24 முதல் நான் ஓய்வுபெற்றதாகக் வைத்துக்கொள்ளுங்கள் ” என்று பதிவிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் கவின் .

அதற்குள் கவின் சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டாரா என்று அந்த வீடியோவை பார்த்தால் அங்கு தான் அதிர்ச்சியே . இத்தனை நாட்களாக பப்ஜி விளையாடிவந்த கவின் . அதை மத்திய அரசு தடை செய்ததால் அதிலிருந்து ஓய்வுபெற்றுள்ளாராம் . அவர் வெளியிட்ட அந்த வீடியோவும் தோனி ஓய்வின்போது வெளியிட்ட வீடியோவின் அதே ஆடியோவை கொண்டுள்ளது இது சில தோனி ரசிகர்களுக்கு கடுப்பேற்றினாலும் பலர் இதை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டுள்ளனர் . கவின் வெளியிட்ட பதிவு

Click  ரகசியமாக வைத்திருந்த பிகினி புகைப்படம் வெளியானதால் கோபமான நடிகை நிதி அகர்வால்

Leave a Reply

Your email address will not be published.