ஷிவானியை சீண்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா ! பதிலடி கொடுத்த ஷிவானி ! இருந்தாலும் அந்த வார்த்தை பயன்படுத்தியிருக்க கூடாது !
பகல் நிலவு மற்றும் ரெட்டை ரோஜா ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன் ! கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கவர்ச்சி படங்களை வெளியிடுவதன் மூலம் பல இளைஞர்களை கவர்ந்துவருகிறார் ஷிவானி . இவரை 20 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர் .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் சித்ரா . அந்த தொடரில் இவர் நடிக்கும் முல்லை கதாபாத்திரம் மிகவும் பிரபலம் . சித்ரா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டுவரும் நிலையில் நீங்கள் எப்போது கவ ர்ச் சி படத்தை வெளியிடுவீர்கள் என்று அவரது ரசிகர் ஒருவர் கமன்ட் செய்துள்ளார்

அதற்க்கு பதிலளித்த சித்ரா அதுபோன்ற கவர்ச்சி படங்களை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் அப்படி வேண்டுமென்றால் 2000 ஆம் ஆண்டு பிறந்த ஒருவர் இருக்கிறார் என்று ஜாடையாக ஷிவானியை குறிப்பிட்டார் சித்ரா .

இதனால் கோபமடைந்த ஷிவானி “மற்றவர்களை பற்றி பேசும் முன் உன் முதுகை பார்” என்றும் “என்னை உன்னக்கு பிடிக்காது ஆனாலும் நான் செய்வதை கவனிக்கிறாய் என்றால் நீயும் என் விசிரியே ” என்று பதிவிட்டு சித்ராவை ஜாடையாக தாக்கியுள்ளார் . இதில் தகாத வரத்தையொன்றை ஷிவானி கூறியுள்ள நிலையில் அதைமட்டும் தவிர்த்திருக்கலாம் என்று ஷிவானியின் ரசிகர்கள் கூறிவருகின்றனர் .
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்