22-08-2020 இன்றைய ராசி பலன்கள் ! இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா ?

22-08-2020, ஆவணி 06, சனிக்கிழமை,இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் !இன்றைய_ராசிப்பலன் aries-மேஷம்இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி
 
22-08-2020  இன்றைய ராசி பலன்கள் ! இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா ?

22-08-2020, ஆவணி 06, சனிக்கிழமை,
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் !
இன்றைய_ராசிப்பலன்

aries-மேஷம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

taurus-ரிஷபம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

gemini-மிதுனம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காணலாம்.

cancer-கடகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

leo-சிம்மம்
இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சினை தீரும்.

virgo-கன்னி
இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

Libra-துலாம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.

scorpio-விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

sagittarius-தனுசு
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.

capricorn-மகரம்
இன்று உங்களுக்கு மனகுழப்பம் அதிகமாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலங்கள் உண்டாகும்.

aquarius-கும்பம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். திருமண சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் தேவை.

pisces-மீனம்
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

Tags