உயிரிழந்து 10 ஆண்டுகளுக்கு பின் வெளியான முரளியின் தனிப்பட்ட டைரி பற்றிய உண்மை ! முரளியின் மனைவி செய்த செயல்

1964 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் முரளி 1982 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க துவங்கினார் தொடர்ந்து பல படங்களில் நடித்த முரளி அவர் உயிரிழக்கும் வரை சினிமாவில் நடித்தார் . 210 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார் முரளி இறுதியாக நடித்த திரைப்படம் அவரது மகன் அதர்வா கதாநாயகனாக நடித்த பானா காத்தாடி . அதில் சிறு வேடத்தில் நடித்திருப்பார் முரளி .

1987 ஆம் ஆண்டு ஷோபா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட முரளிக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர் . மூத்த மகன் அதர்வா இப்போது கதாநாயகனாக கலக்கி வருகிறார் . நடிகர் முரளிக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. அதில் அவர் தினமும் அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை எழுதி வைப்பார் .

இந்நிலையில் தான் முரளி மற்றும் அவரது மனைவி பற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பதிவிட்டுள்ளார் பிரபல பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியம் . முரளிக்கு 17 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம் அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அறிந்த திருப்பூர் சுப்பிரமணியம் ,

Tiruppur Subramaniyam

முரளியின் மனைவியிடம் கொடுத்த கடனை கேற்க மனமில்லாமல் கடனை கேற்கக்கூடாது என்று முடிவுசெய்து முரளி கையெழுத்து போட்டுத்தந்த கடன் பத்திரத்தை கிழித்தெறிந்துள்ளார் . சில நாட்களுக்கு பிறகு திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களை தொடர்புகொண்ட முரளியின் மனைவி ஷோபா .

தனது கணவர் வாங்கிய 17 லட்சம் ரூபாயை திருப்பி தருவதாக கூறி . அவரை வீட்டுக்கு அழைத்து அந்த கடனை திருப்பி செலுத்தியுள்ளார் . அப்போது திருப்பூர் சுப்ரமணியம் நான் உங்களிடம் பணம் கேற்கவில்லை ஆனால் எப்படி தெரியும் என்று கேட்டுள்ளார் அப்போது தான் முரளி தனது டைரியில் தான் பெற்ற கடன்களின் விவரங்களை குறித்து வைத்திருந்தது பற்றி கூறியுள்ளார் ஷோபா ,

மேலும் முரளி வாங்கி வைத்திருந்த நிலத்தை விற்று கடன்களை அடைத்துவருவதாகவும் . உங்கள் கடனை தான் முதலில் அடைந்ததாகவும் கூறி நெகிழவைத்துள்ளார் . அப்போது ஏன் எனக்கு முதலில் என்று கேட்டுள்ளார் சுப்ரமணியம் . அதற்க்கு கடன் கொடுத்தவர்களின் நீங்கள் ஒருவர் தான் கடனை திருப்பி கேற்கவில்லை அதனால் தான் உங்களுக்கு முதலில் தருகிறேன் என்று கூறியுள்ளார் ஷோபா .

Click  ரவுடி பேபி பாடலுக்கு குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்ட ஷிவானி ! வைரலாகும் வீடியோ !

மேலும் வீட்டிலிருந்த தனது மகன் அதர்வாவை அழைத்து . உன் படம் வெற்றிபெற இவரிடம் ஆசிபெற்றுகொள் என்றும் கூறியுள்ளார் . அதர்வாவும் திருப்பூர் சுப்ரமணியம் கால்களை தொட்டு ஆசி பெற்றுள்ளார் . இந்த தகவலை 10 ஆண்டுகளுக்கு பின் ஒரு நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published.