உலகளவில் டிஸ்லைக்கில் முதலிடம் பிடித்தது ஆலியாபட்டின் சதக் 2 டிரெய்லர் , 7 நாட்களில் இத்தனை டிஸ்லைக் வர காரணம் என்ன தெரியுமா ?

கடந்த 1991 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான சதக் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது . அதன் தொடர்ச்சியாக சதக் 2 என்ற படத்தை எடுக்க முடிவுசெய்த முக்கிய பாலிவுட் இயக்குனரும் , ஆலியாபட்டின் தந்தையுமான மகேஷ் பட் . தனது மகள் ஆலியாபட்டை வைத்தே அந்த படத்தை எடுத்து முடித்தார் .

கொரோனா ஊரடங்கு தொடர்ந்து நீடித்துக்கொண்டே செல்வதால் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட முடிவுசெய்த மகேஷ் பட் . சதக் 2 படத்தின் டிரைலரை கடந்த 11 ஆம் தேதி வெளியிட்டனர் . ட்ரைலர் வெளியான நாள் முதலே டிஸ்லைக்குகள் குவிந்துவந்த நிலையில் தற்போதுவரை 1கோடியே 10 லட்சம் பேர் டிஸ்லைக் செய்துள்ளனர் .

இது தான் உலகிலேயே குறுகிய காலத்தில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ . YouTube தளத்தில் உள்ள விடீயோக்களில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோக்களின் பட்டியலில் உலகிலேயே 2 ஆம் இடம் பிடித்துள்ளது சதக் 2 டிரைலர் . முதலிடத்தில் உள்ள YouTube Rewind2018 வீடியோ 1.8 கோடி டிஸ்லைக் பெற்றுள்ள நிலையில் .

சதக் 2 டிரைலர் முதலிடம் பிடிக்க இன்னும் 70 லட்சம் டிஸ்லைக்குகளே தேவை . விரைவில் சதக் 2 டிரைலர் உலகிலேயே அதிக டிஸ்லைக்குகள் பெற்ற வீடியோவாக மாறும் என்று பலரும் கூறி வருகின்றனர் . இப்போது உலகிலேயே அதிக டிஸ்லைக் பெற்ற டிரைலர் என்ற சாதனையை படைத்துவிட்டது சதக் 2.

ஆலியா பட் மற்றும் அவரது தந்தை மகேஷ் பட் மீதுள்ள கோபத்தை டிஸ்லைக்குகள் மூலம் மக்கள் வெளிப்படுத்திவருகின்றனர் . அதற்க்கு காரணம் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் . அவரது தற்கொலைக்கு பாலிவுட்டில் உள்ள நேபோட்டிசம் தான் கரணம் என்று கூறப்பட்ட நிலையில் . அதில் ஆலியாபட்டின் பெயரும் முக்கியமாக அடிபடுவதால் ஆலியாபட் மீது கடும் கோபத்தில் உள்ளனர் ரசிகர்கள் . அந்த கோபத்தை தான் டிஸ்லைக்குகளாக வெளிப்படுத்தி வருகின்றனர் .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  டாட்டூ தெரியும் படி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட விக்ரம் வேதா பட நடிகை..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.