ஆக்சன் கிங் அர்ஜூனுடன் நடிக்கும் லாஸ்லியா! சம்பளம் எவ்வளவு தெரியுமா ? சற்றுமுன் ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தி !
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா , இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா , பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்று இறுதிவரை இருந்து மூன்றாம் இடம் பிடித்தார், ஆரம்பத்தில் அமைதியான பெண்ணாக இருந்த லாஸ்லியா, கவின் உடனான காதலுக்கு பின் மிகவும் பிரபலமானார்
பிக் பாஸுக்கு பின் கவினுடனான தொடர்பை முறித்துக்கொண்டு லாஸ்லியா தற்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . அறிமுக இயக்குனர் ஜான் பால் ராஜ் இயக்கத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் , ஹர்பஜன் சிங் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் பிரெண்ட்ஷிப்( Friendship ) என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லாஸ்லியா நடித்துவருகிறார் , அதேபோல நடிகர் ஆரி , சுரிஸ்டி டாங்கோ நடிப்பில் உருவாகிவரும் ஒரு படத்திலும் லாஸ்லியா நடித்து வருகிறார்

அர்ஜுன் , ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள பிரென்ஷிப் திரைப்படம் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் அந்த படத்திற்கு லாஸ்லியா எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது . அதன்படி அந்த படத்தில் நடிக்க 25 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் லாஸ்லியா லாஸ்லியாவின் முதல்படமான பிரென்ஷிப் படத்திற்கு 25 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார் என்ற செய்தி ஒரு ஆங்கில இணையவழி ஊடகம் மூலம் வெளியாகியுள்ளது . தனது இரண்டாவது படத்திற்கும் அதே சம்பளம் தான் லாஸ்லியா பெற்றுள்ளார் .
இந்த படங்களின் வெற்றியை பொறுத்து அடுத்தடுத்த படங்களில் தனக்கான சம்பளத்தை உயர்த்திக்கொள்ள முடிவுசெய்துள்ளாராம் . இதற்கிடையில் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் லாஸ்லியா
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்
