பிக் பாஸ் 4 கலக்கப்போகும் டிக் டாக் பிரபலங்கள் மற்றும் தளபதி பட நடிகை ! முழு விவரம் !

விஜய் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது . அந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார் . இதுவரை 3 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் . கடந்த ஜூன் மாதமே துவங்கவேண்டிய நான்காவது சீசன் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது .

தடைபட்டிருந்த தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் . பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்க திட்டமிட்டுள்ளனர் . இதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்ட நிலையில் அக்டோபர் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் என கூறப்பட்டுள்ளது . ஆனால் இதே காலத்தில் ஐபிஎல் நடைபெறுவதால் குழப்பத்தில் உள்ளனர் .

இந்த சீசனில் கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுப்படலாம் என்று கூறப்படுகிறது . அதனால் டிக் டாக் பிரபலம் இலக்கியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொண்டுவர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . அதேபோல ஜிபி முத்துவை கொண்டுவரவும் வாய்ப்புள்ளது . இது தவிர சமூகவலைத்தளம் மூலம் பிரபலமாகி தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த ரம்யா பாண்டியன் நிச்சயம் இந்த பிக் பாசில் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது .

இதுதவிர வேறு சில சமூகவலைத்தள பிரபலன்களிடமும் பேச்சுவார்த்தை நடைபேருவதாக கூறப்படுகிறது . மேலும் இந்த முறை பிக் பாசில் பங்கேற்கும் போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கு முன் 15 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் . பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தபின்னரும் தினமும் ஒருமுறை உடல் வெப்பநிலை சோதிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர் .

பிக் பாஸ் நான்கு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டிய நடிகை அதுல்யா ரவி..!! ஹாட் போட்டோஸ்!!

Leave a Reply

Your email address will not be published.