நடித்ததில் 2 படம் தான் ஹிட் ஆனால் சம்பளம் மட்டும் 100 கோடியா ? அப்போ ரஜினி , விஜய் , அஜித்தலாம் என்ன ?

கடந்த 10 ஆண்டுகளில் நடிகர்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ளது . பாலிவுட்டை விட தமிழ் நடிகர்களுக்கு சம்பளம் குறைவு தான் கரணம் பாலிவுட் சினிமாவில்க்கு பார்வையாளர்கள் அதிகமாக உள்ளனர் . ஆனால் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா கிட்டத்தட்ட ஒரே அளவு பார்வையாளர்களை கொண்டது .

இந்நிலையில் தான் பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பிரபாஸ் தனது அடுத்த படத்திற்கு 100 கோடி சம்பளமாக கேட்டுள்ளார் . சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தர்பார் படத்திற்கு 70 கோடி தான் சம்பளமாக பெற்றார் .

ஆனால் பாகுபலி 1 , பாகுபலி 2 என இரண்டு வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துள்ள பிரபாஸ் 100 கோடி கேற்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது . இவர் பாகுபலிக்கு பிறகு நடித்த சாகோ திரைப்படம் எதிர்பார்த்த அளவு போகாத நிலையில் . ராதே ஷியாம் என்ற படத்தில் நடித்துவருகிறார் .

இவரின் அடுத்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக உருவாக்கப்படவுள்ளது . இந்த படத்தில் நடிக்க 100 கோடியை சம்பளமாக கேட்டுள்ளார் பிரபாஸ் இதை கேட்ட தெலுங்கு ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் . தமிழில் பல வெற்றிகளை கொடுத்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள விஜய் 50 கோடி சம்பளம் வாங்குகிறார் , அஜித் 40-50 கோடி சம்பளமாக வாங்குகிறார் ஆனால் 2 ஹிட் கொடுத்த பிரபாஸுக்கு 100 கோடியா என்று தமிழ் ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *