10-08-2020 இன்றைய ராசி பலன்கள் மற்றும் இன்றைய பஞ்சாங்க பலன்கள் ! இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா ?

10-08-2020, ஆடி 26, திங்கட்கிழமை, #சஷ்டி காலை 06.43 வரை பின்பு தேய்பிறை சப்தமி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 10.05 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு_காலம் காலை 07.30 -09.00, எம_கண்டம் 10.30 – 12.00,
குளிகன் மதியம் 01.30-03.00,
சுப_ஹோரைகள் மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய_ராசிப்பலன்

aries-மேஷம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பொருளாதார தேவைகள் நிறைவேறும்.

taurus-ரிஷபம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் நண்பர்களால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிட்டும்.

gemini-மிதுனம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும்.

cancer-கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும்.

leo-சிம்மம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் கிட்டும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் உடனிருப்பர்வகளின் ஒத்துழைப்பால் குறையும்.

virgo-கன்னி
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

libra-துலாம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணிச்சுமை குறையும். தொழில் ரீதியாக வெளியூர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

scorpio-விருச்சிகம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் பெருகும்.

sagittarius-தனுசு
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் சிறு சிறு மன சங்கடங்கள் ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

capricorn-மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும்.      அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

aquarius-கும்பம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

pisces-மீனம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் வேலை ஆட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம்.

தினமும் காலை 5 மணிக்கு நமது பஞ்சாங்க பலன்கள் மற்றும் இன்றைய ராசிபலன்கள் வெளியாகும் . தினமும் தவறாமல் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி நமது Tamil Today பக்கத்தை பாலோ செய்துகொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *