09-08-2020 இன்றைய ராசி பலன்கள் மற்றும் இன்றைய பஞ்சாங்க பலன்கள் ! இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா ?

09-08-2020, ஆடி 25, ஞாயிற்றுக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை #சஷ்டி திதி. ரேவதி நட்சத்திரம் இரவு 07.06 வரை பின்பு அஸ்வினி. அமிர்தயோகம் இரவு 07.06 வரை பின்பு #சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு_காலம் மாலை 04.30 – 06.00,
எம_கண்டம் பகல் 12.00 – 01.30, குளிகன்
பிற்பகல் 03.00 – 04.30, சுப_ஹோரைகள்
காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 ,
மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

இன்றைய_ராசிப்பலன்

aries-மேஷம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

taurus-ரிஷபம்
இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

gemini-மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். பாதியில் நின்ற பணிகள் இன்று முடிப்பதற்கான சூழ்நிலை ஏற்படும்.

cancer-கடகம்
இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வீண் செலவுகள் ஏற்படும். கையிருப்பு குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

leo-சிம்மம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.

Click  13-08-2020 இன்றைய ராசி பலன்கள் ! இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா ?

virgo-கன்னி
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

libra-துலாம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வெளியூர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

scorpio-விருச்சிகம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.

sagittarius-தனுசு
இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சினைகளை சமாளிக்கலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.

capricorn-மகரம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த நற்செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும்.

aquarius-கும்பம்
இன்று உங்களுக்கு உறவினர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களில் சற்று கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.

pisces-மீனம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

தினமும் காலை 5 மணிக்கு நமது பஞ்சாங்க பலன்கள் மற்றும் இன்றைய ராசிபலன்கள் வெளியாகும் . தினமும் தவறாமல் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி நமது Tamil Today பக்கத்தை பாலோ செய்துகொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published.