கடும் எதிர்ப்பை மீறி டைம்ஸ் சதுக்கத்தில் ஒளித்த ஸ்ரீ ராமர் ! வெளியான வீடியோ ! மகிழ்ச்சியில் ராம பக்தர்கள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இன்று பிரதமர் மோடி அடிக்கநாட்டிய நிலையில் அடுத்த மூன்றரை ஆண்டுகளில் 300 கோடி செலவில் அயோத்தியில் மிகப்பெரிய ராமர் கோவில் கட்டப்படவுள்ளது இந்நிலையில் தான் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள பிரமாண்ட டிஜிட்டல் திரைகளில் ராமரின் 3D உருவங்கள் ஒளிபரப்பப்படும் என்ற தகவல் வெளியானது

இதற்க்கு அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் , டைம்ஸ் சதுக்கத்தில் பகவான் ஸ்ரீ ராமர் படங்களை ஒளிபரப்புவதற்கு எதிராக பல நடவடிக்கைகளை ஏடுத்ததுடன், மேயர் வரை சென்று புகாரளித்தனர் . இது அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல் என்றும் வாதிட்டனர்

ஆனாலும் பல தடைகளை தாண்டி இன்று நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள டிஸ்பிலே போர்டில் அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோவில் மற்றும் ஸ்ரீ ராமரின் 3D படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது . அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது , மேலும் இன்று வாஷிங்க்டன் பகுதியில் இந்தியர்கள் ஒன்றுகூடி ராமர் கோவில் பூஜையை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது

Click  ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் - ராமதாஸ்

Leave a Reply

Your email address will not be published.