05-08-2020 இன்றைய ராசி பலன்கள் மற்றும் இன்றைய பஞ்சாங்க பலன்கள் ! இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா ?

05-08-2020, ஆடி 21, புதன்கிழமை, துதியை திதி இரவு 10.51 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் காலை 09.30 வரை பின்பு #சதயம். பிரபலாரிஷ்ட யோகம் காலை 09.30 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1.இராகு_காலம்
மதியம் 12.00-1.30, எம_கண்டம் காலை 07.30-09.00, குளிகன்
பகல் 10.30 – 12.00,சுப_ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00,இரவு 07.00-09.0011.00-12.00

இன்றைய_ராசிப்பலன்

aries-மேஷம்
இன்று உங்களுக்கு காலையிலேயே ஆச்சிரியப்படும் படியான தகவல்கள் வந்து சேரும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார தேவைகள் எளிதில் நிறைவேறும், வழக்கு சம்பந்தபட்ட விஷயங்களில் வெற்றி உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

taurus-ரிஷபம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். வருமானம் இரட்டிப்பாகும்.

gemini-மிதுனம்
இன்று உங்களுக்கு தனவரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். திருமண முயற்சி தாமதமாகும்.

cancer-கடகம்
இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் சற்று பாதிப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

leo-சிம்மம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் உபாதைகள் விலகி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனைத் தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

virgo-கன்னி
இன்று உங்களுக்கு குடும்பத்தில் சிறப்பான பண வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்க இன்று அனுகூலமான நாளாகும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

Click  29-10-2021 இன்றைய ராசி பலன்கள் ! இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா ?

libra-துலாம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, அசதி இருந்தாலும் எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். வரவும் செலவும் சமமாகவே இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கடன்கள் குறையும்.

scorpio-விருச்சிகம்
இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணிகளில் கவனம் தேவை.

sagittarius-தனுசு
இன்று நீங்கள் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

capricorn-மகரம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு சற்று கூடுதலாகவே இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

aquarius-கும்பம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். எடுத்த காரியம் எளிதில் முடியும். எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் மன நிம்மதி அதிகரிக்கும்.

pisces-மீனம்
இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால்  அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

தினமும் காலை 5 மணிக்கு நமது பஞ்சாங்க பலன்கள் மற்றும் இன்றைய ராசிபலன்கள் வெளியாகும் . தினமும் தவறாமல் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி நமது Tamil Today பக்கத்தை பாலோ செய்துகொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published.