07-05-2022 இன்றைய ராசி பலன்கள் ! இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா ?

சுபகிருது ஆண்டு சித்திரை 24 நாள்:சனிக்கிழமை (07.05.2022). நட்சத்திரம் : புனர்பூசம் 12:18 PM வரை பிறகு பூசம் சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக,
 
07-05-2022 இன்றைய ராசி பலன்கள் ! இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா ?

சுபகிருது ஆண்டு சித்திரை 24 நாள்:சனிக்கிழமை (07.05.2022). நட்சத்திரம் : புனர்பூசம் 12:18 PM வரை பிறகு பூசம் சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள். இன்றைய ராசிபலன் கீழே!!


மேஷம்

மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள் அதை பெரிதுபடுத்த வேண்டாம். அனாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் வேலையாட் களுடன் போராட வேண்டி வரும். உத்தியோ கத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். அரசாங்க விஷயம் தாமதமாக போய் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர் கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து  உயரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மறைத்து பாராட்டப்படுவீர்கள். சிறப்பு மிகுந்த நாள்.

Click  31-07-2020 இன்றைய ராசி பலன்கள் மற்றும் இன்றைய பஞ்சாங்க பலன்கள் ! இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா ?

துலாம்

துலாம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய உற வினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதிப் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். எதிர் பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள் .

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது.  நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் அது உபத்திரத்தில் போய் முடியும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார் கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கும்பம்

கும்பம்:  எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.

மீனம்

மீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறி வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புதுமை படைக்கும் நாள்.

Tags