பாகிஸ்தான் செய்தி சேனலை ஹேக் செய்து இந்திய கொடியை பறக்கவிட்ட இந்திய ஹாக்கர்கள் ! வெளியான வீடியோக்கள் !

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் நேற்றிரவு பாகிஸ்தான் செய்தி ஊடகமான டவான் நியூஸ் என்ற செய்தி சேனலை ஹேக் செய்த ஹாக்கர்கள் அதில் இந்திய தேசிய கொடியை வரவழைத்ததுடன் அதில் “Happy Independence day” சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்றும் வரவழைத்தனர் .

நேற்றிரவு டவான் நியூஸ் என்ற செய்தி சேனலில் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது . இந்த செய்தி இந்தியாவில் பரவிய நிலையில் ஆரம்பத்தில் இதை மறுத்த பாகிஸ்தான் இப்போது ஒப்புக்கொண்டுள்ளது .

மேலும் இந்த ஹேக்கிங் சம்பவம் தொடர்பான வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது .

2016 ஆம் ஆண்டு இதேபோல பாகிஸ்தான் விவசாய துரையின் இணையதளத்தை ஹேக் செய்த இந்திய ஹாக்கர்கள் நாங்கள் சைபர் தாக்குதல் நடத்தினால் அது நாங்கள் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை விட மோசமானதாக இருக்கும் என்று பாகிஸ்தான் ஹாக்கர்களை எச்சரித்தனர் .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *