ஜீன்ஸ் பேண்டுக்குள் புகுந்த நாக பாம்பு ! 7 மணிநேரம் பாம்புடன் வாழ்ந்த இளைஞர் ! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா ? வெளியான வீடியோ

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே உள்ள கிராமத்தில் நன்கு உறங்கிக்கொண்டிருந்த இளைஞயர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டுக்குள் ஒரு பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மிர்சாபூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர் இரவு வரை வேலை செய்தும் பணிகள் முடியாததால் அங்குள்ள பள்ளியில் இரவு தங்கிவிட்டு மறுநாள் பணியை தொடர திட்டமிட்ட மின்சார ஊழியர்கள் இரவு பள்ளியில் தூங்கினார் அப்போது லவ்லேஷ் என்ற ஊழியரின் பேண்டுக்குள் எதோ ஊர்வதுபோல உணர்ந்துள்ளார்

உடனே பதறிப்போய் எழுந்த அவர் சற்று சுதாரித்துக்கொண்டு பார்த்தபோது அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டுக்குள் ஒரு பாம்பு இருந்துள்ளது . சற்று அசைந்தாலும் அந்த பாம்பு கடித்து விடுமோ என்ற அச்சத்தில் அருகிலிருந்த தூணை பிடித்தபடி அசையாமல் நின்றுள்ளார் . பாம்பு எப்போதுவேண்டுமானாலும் கடிக்கும் அபாயம் இருந்ததால் ரிஸ்க் அடுக்க விரும்பாத சக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுத்தனர் .

அங்கு வந்த பாம்பு பிடிப்பவர்கள் ௭ மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பேண்ட்டை கொஞ்சம் கொஞ்சமாக கிழித்து அந்த பாம்பை வெளியில் எடுத்தனர் . அந்த வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளவும்

Click  பெரியாரிஸ்ட் ஆதரவாளர் வேலையிலிருந்து தூக்கிய ஊடகம் ! முதல் விக்கெட் ! கப்சிப் ஆன ஊடகவியலாளர்கள் !

Leave a Reply

Your email address will not be published.