முழுமையாய் பார்க்காமல் செய்தியை வெளியிட்டு சிக்கிக்கொண்ட ராகுல் காந்தி ! கிழிக்கும் நெட்டிசன்கள் !

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார் அதில் இந்திய ரயில்வே துறை பெரும் நஷ்டத்தில் இருப்பதாகவும் அதனால் ஊழியர்களுக்கு பென்ஷன் மற்றும் சம்பளம் வழங்கமுடியாத சூழல் உருவாகியிருப்பதாகவும் குறிப்பிட்டார் .

மேலும் ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்கமுடியாது இந்த ரயில்வே துறை தான் Pm Care நிதிக்கு 151 கோடி கொடுத்திருப்பதாக கூறினார் . மேலும் இன்னொரு டீவீட்டில் இது மத்திய பாஜக அரசின் தந்திரம் என்றும் ஒரு நிறுவனத்தை திவாலாக்கி அதை தனியாருக்கு விற்க முயற்சி நடப்பதாகவும் குற்றம்சாட்டினார் .

இதுஒருபுரம் இருக்க நேற்றிரவு காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பென்ஷன் தரமுடியாத ரயில்வே துறை தான் PM care நிதிக்கு 151 கோடி கொடுத்துள்ளது என்று விமர்சித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தனர் .
இதன் உண்மை என்ன என்பதை இப்போது பார்ப்போம்

முதலில் ரயில்வே துறை PM care நிதிக்கு 151 கோடி தந்ததாக கூறுவது தவறு . ஏன் என்றால் மார்ச் 29 ஆம் தேதி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் ரயில்வே ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒருநாள் சம்பளத்தை PM care நிதிக்கு தருமாறு கூறியிருந்தார் .

இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் ஒரு நாள் சம்பளமான 151 கோடியை PM care நிதிக்கு கொடுப்பார்கள் என்று மார்ச் 29 ஆம் தேதியே அறிவித்த நிலையில் . நேற்று அதை திரித்து ரயில்வே துறையே பணத்தை கொடுத்ததுபோல வெளியிட்டுள்ளது காங்கிரஸ்

அடுத்து இந்தியாவில் மொத்தம் 16 ரயில்வே ஊழியர்கள் பென்ஷன் பெரும் நிலையில் அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 50,000 கோடி பென்ஷனனாக வழங்கப்படுகிறது அதில் 151 கோடி என்பது ஒரு சிறு பருக்கையே ஆகும் . இந்திய ரயில்வே தன் வருவாயில் 25 சதவீதத்தை பென்ஷன் கொடுப்பதற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது என்பது கூடுதல் தகவல் .

இந்த செய்தியை Opindia நிறுவனம் வெளியிட்ட நிலையில் பலரும் ராகுல் காந்தியை நோக்கி கேள்வியெழுப்பி வருகினறனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *