இந்த வயசுல கூட இவ்வளவு அழகா இருக்காங்க..!! ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட நடிகை சாயா சிங்!!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சாயா சிங்.இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த
படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல்
மக்கள் மத்தியில் பட்டித்தொட்டி எங்கும் வைரல் ஆனது. இந்த பாடலுக்கு தனுஷ், சாயா சிங் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஆடியிருப்பார்கள்.இந்த திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

இவர் 1981 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.இவர் 2000 ஆம் ஆண்டு
முன்னூடி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்திற்காக தேசிய திரைப்பட விருதையும் வென்றார். அதன் பிறகு சில கன்னடப் படங்களில் நடித்து வந்தார்.ஆனால் இந்த படங்கள் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.

தமிழில் திருடா திருடி,கவிதை,திருப்பாச்சி
இது கதிர்வேலன் காதல், இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.இவர் கீ கொரே பொஜாபூ டுமாகே என்ற பெங்காலி படத்தை இயக்கியுள்ளார்.
இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பெங்காலி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருமே ஜோடியாக சன் டிவியில் ரன் என்ற சீரியலில் நடித்தார்கள்.

தமிழில் கடைசியாக ஆக்ஷன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது தமிழரசன் என்ற படத்தில்
நடித்து வருகிறார்.இதுமட்டுமல்ல இவர் பூவே உனக்காக நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது டி சர்ட் அணிந்து உதட்டை அசைத்து செம அழகாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல கூட இவ்வளவு அழகா இருக்காங்க.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  ரோஜா சீரியல் ஹீரோயினா இவங்க ! வெளியான கிளாமர் புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.