27-07-2020 இன்றைய பஞ்சாங்க பலன்கள் மற்றும் இன்றைய ராசிபலன் ! இன்று உங்கள் ராசிக்கு என்ன நடக்கும் ! இன்றைய பலன்

27-07-2020, ஆடி 12, திங்கட்கிழமை, சப்தமி திதி காலை 07.10 வரை பின்பு அஷ்டமி திதி பின்இரவு 04.58 வரை பின்பு வளர்பிறை நவமி. சித்திரை நட்சத்திரம்
 
27-07-2020  இன்றைய பஞ்சாங்க பலன்கள் மற்றும் இன்றைய ராசிபலன் ! இன்று உங்கள் ராசிக்கு என்ன நடக்கும் ! இன்றைய  பலன்

27-07-2020, ஆடி 12, திங்கட்கிழமை, சப்தமி திதி காலை 07.10 வரை பின்பு அஷ்டமி திதி பின்இரவு 04.58 வரை பின்பு வளர்பிறை நவமி. சித்திரை நட்சத்திரம் பகல் 11.03 வரை பின்பு #சுவாதி. பிரபலாரிஷ்ட_யோகம்
பகல் 11.03 வரை பின்பு அமிர்த_யோகம்.
நேத்திரம் – 1 ஜீவன் – 1/2. லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு_காலம் காலை 07.30 -09.00,
எம_கண்டம் 10.30 – 12.00, குளிகன்
மதியம் 01.30-03.00, சுப_ஹோரைகள் மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00,மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

27-07-2020  இன்றைய பஞ்சாங்க பலன்கள் மற்றும் இன்றைய ராசிபலன் ! இன்று உங்கள் ராசிக்கு என்ன நடக்கும் ! இன்றைய  பலன்

இன்றைய_ராசிப்பலன்

aries-மேஷம்
இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.

taurus-ரிஷபம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

gemini-மிதுனம்
இன்று தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

cancer-கடகம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

leo-சிம்மம்
இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.

virgo-கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சற்று சுமாராக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

27-07-2020  இன்றைய பஞ்சாங்க பலன்கள் மற்றும் இன்றைய ராசிபலன் ! இன்று உங்கள் ராசிக்கு என்ன நடக்கும் ! இன்றைய  பலன்

libra-துலாம்
இன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

scorpio-விருச்சிகம்
இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வீட்டில் ஒற்றுமை குறையலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன் ஓரளவு குறையும்.

sagittarius-தனுசு
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

capricorn-மகரம்
இன்று நீங்கள் கடினமான காரியங்களையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் ஏற்படும்.

aquarius-கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடன் இருப்பவர்களால் பணிச்சுமை குறையும்.

pisces-மீனம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.

இதுபோல தினமும் காலை 5 மணிக்கு நமது பஞ்சாங்க பலன்கள் மற்றும் இன்றைய ராசிபலன்கள் வெளியாகும் . தினமும் தவறாமல் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி நமது Tamil Today பக்கத்தை பாலோ செய்துகொள்ளவும்

Tags