மாரிதாஸ் மீது எந்த வழக்கும் பதிவுசெய்யவில்லை ! திருடனுக்கு தேள் கொட்டியது போல சிக்கிய ஊடகம் ! ஏன் தெரியுமா ?

தமிழக ஊடகங்கள் நடுநிலையாக செயல்படவில்லை அதில் வேலை செய்யும் பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர் என்று ஆதாரத்தை வெளியிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார் மாரிதாஸ்
 
மாரிதாஸ் மீது எந்த வழக்கும் பதிவுசெய்யவில்லை ! திருடனுக்கு தேள் கொட்டியது போல சிக்கிய ஊடகம் ! ஏன் தெரியுமா ?

தமிழக ஊடகங்கள் நடுநிலையாக செயல்படவில்லை அதில் வேலை செய்யும் பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர் என்று ஆதாரத்தை வெளியிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார் மாரிதாஸ் .

இந்த பிரச்சனையில் பெரிதாக அடிபட்டது நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் தான் . வீடியோ வெளியிட்டதோடு நிற்காமல் இதுதொடர்பான புகாரை நியூஸ் 18 தலைமை நிர்வாகத்திற்கு அனுப்பினார் . இது தொடர்பாக நியூஸ் 18 நிர்வாகம் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் .

நியூஸ் 18 அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகரவரி மூலம் மாரிதாஸுக்கு ஒரு பதில் வந்ததாக கூறி அதை வெளியிட்டார் மாரிதாஸ் . ஆனால் அந்த மின்னசலை அனுப்பியதாக கூறப்படும் நபர் தனது டிவிட்டர் பக்கத்தில் தான் அந்த மின்னஞ்சலை அனுப்பவில்லை என்று கூறினார் .

இது நடந்து 10 நாட்கள் ஆன நிலையில்
கடந்த 15 ஆம் தேதி நியூஸ்18 நிர்வாகம் சார்பில் இந்த போலி மின் அஞ்சலை அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையில் புகாரளித்தது . அதற்க்கு முன்னர் 14 ஆம் தேதியே மாரிதாஸ் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகாரளித்துவிட்டார் .

மாரிதாஸ் மீது எந்த வழக்கும் பதிவுசெய்யவில்லை ! திருடனுக்கு தேள் கொட்டியது போல சிக்கிய ஊடகம் ! ஏன் தெரியுமா ?

மாரிதாஸ் மற்றும் நியூஸ் 18 ஆகிய இருவருமே இந்த போலி மின்னஞ்சலை அனுப்பியவர் மீதுதான் புகாரளித்துள்ளனர் .ஆனால் ஒரு குறிப்பிட்ட தனியார் ஊடகம் மரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தவறான செய்தியை வெளியிட்டது .

பலரும் கண்டனம் தெரிவிக்கவே அந்த செய்தியை அணைத்து பக்கங்களில் இருந்தும் டிலீட் செய்தது அந்த ஊடகம் . இது ஒருபுறம் இருக்க சமூகவலைத்தளங்களில் ஆபாசமாகவோ , அருவறுக்கத்தக்கவகையிலோ பதிவிடுவது , கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்டவையே குற்றம் என்றும் .

மாரிதாஸ் பேசியவை அனைத்தும் அவருடைய கருத்து சுதந்திரம் என்ற பட்டியலில் வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர் . இத்தனை வருடங்களாக ஊடகங்கள் கூறிவந்த கருத்து சுதந்திரம் , அவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது.
மேலும் மாரிதாஸ் பற்றி பொய் செய்தி வெளியிட்ட அந்த பிரபல தனியார் ஊடகம் மீது மாரிதாஸ் புகாரலித்துள்ளார் .

Tags