என்னை ஒரு நாய் ஆ கூட மதிக்கல ! மருந்து வாங்கக்கூட 1000 ருபாய் இல்லை ! இந்த நடிகரும் , பாஜகவும் தான் என்னை காப்பாற்றினார்கள் ! ஜெய் ஸ்ரீ ராம் என்றே மந்திரமே எனக்கு ஊக்கமளிக்கிறது ! நடிகர் பொன்னம்பலம் பேட்டி ! முழு விவரம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பரந்த வில்லன் நடிகர் பொன்னம்பலம் ! 90 களில் வந்த பல படங்களில் அவர் வில்லனாக கலக்கினார் தமிழ் சினிமாவின் டாப் ௧௦ வில்லன்கள் என்ற பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் பொன்னம்பலத்தின் பெயர் இருக்கும் . அதிலும் அவர் நடித்த நாட்டாமை திரைப்படம் ஒரு மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம்

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த பொன்னம்பலம் இப்போது மருத்துவனையில் இருந்து வீடுதிரும்பியுள்ளார் . சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டுவரும் அவருக்கு கூடிய விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் . இந்த சூழலில் பிரபல இணையவழி ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார் . அதில் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார் பொன்னம்பலம் .

அதில் அவர் தனது உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களுக்கு நிறைய உதவிகள் செய்ததாலும் , தன்னை சிலர் நம்பவைத்து ஏமாற்றியதாலும் வறுமையில் வாடுவதாக கூறினார் . தன்னிடம் மருத்து மாத்திரை வாங்க கூட பணமில்லை என்று கூறிய அவர் . மற்றவர்களிடம் உதவிகேற்க மனமில்லாமல் தன் மனைவியின் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்று மருத்துவம் பார்த்துவந்ததாக கூறினார் .

ஒருகட்டத்தில் ஒன்றுமில்லாமல் போக அவரது உடல்நிலையும் மோசமாகியுள்ளது 24 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூற . நடிகர் சரத்குமாரிடம் உதவிகிட்டுளார் . உடனே அடுத்த 10 நிமிடத்தில் அந்த அறுவை சிகிச்சைக்கு தேவையான 50 ஆயிரம் ரூபாயை கொடுத்து உதவியுள்ளார் சரத்குமார் .

பொன்னம்பலத்தில் நிலை குறித்து காயத்ரி ரகுராமுக்கு தெரியவர அவர் தமிழக பாஜக தலைமையிடம் கூறியுள்ளார் . அடுத்தநாளே பொன்னம்பலத்தை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல் முருகன் 2 லட்சம் ருபாய் கொடுத்து உதவியுள்ளார் .

இந்த சம்பவங்களை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட பொன்னம்பலம் . தனது தாய்வீடான ஸ்டண்ட் யூனியன் தன்னை தங்கள் வீட்டு நாயாக கூட மதிக்கவில்லை என்று வேதனையுடன் கூறினார் . மாதாமாதம் சந்தா கேற்கும் ஸ்டண்ட் யூனியன் , தன்னுடைய உடல்நிலை அறிந்தும் தனக்கு சேரவேண்டிய ஓய்வூதிய தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறினார் . பல முறை கடிதம் தந்தும் இதுவரை தனக்கு சேர வேண்டிய பணத்தை தரவில்லை . தன்னுடைய உடல்நிலை பற்றிக்கூட யாரும் கேற்கவில்லை என்று வருத்தத்துடன் கூறினார் .

Click  தாங்க முடியாத தாகம் தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில் ! இறுதியில் ஒருவர் கொடுத்த தண்ணீர் ! மனதை நெகிழவைக்கும் வீடியோ !

மேலும் தனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்று கூறிய அவர் இந்த இக்கட்டான சூழலிலும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற மந்திரமே தனக்கு மனவலிமை அளிப்பதாக கூறினார்

மேலும் தான் வாடகை வீட்டில் தான் வாழ்வதாக கூறிய பொன்னம்பலம் தனது எதிர்காலத்திற்கு கூட எதையும் சேர்த்துவைக்கவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டார் . மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்கு உதவி செய்வதாக கூறியுள்ளார் என்று கூறிய பொன்னம்பலம் . தனது குழந்தைகளுக்கு கமல் பள்ளி கட்டணம் செலுத்துவதாக கூறியதாகவும் கூறினார்

இதுபோன்ற பல செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published.