மாரிதாஸ் மீது வழக்கு போட்டுள்ளதா நியூஸ் 18 ? செய்தியை வெளியிட்டு பின்னர் டிலீட் செய்த பிரபல ஊடகம் ! இது பற்றி மாரிதாஸ் என்ன கூறியுள்ளார் தெரியுமா ?

தமிழக ஊடகங்கள் நடுநிலையாக செயல்படவில்லை அதில் வேலை செய்யும் பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர் என்று ஆதாரத்தை வெளியிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார் மாரிதாஸ் .

இந்த பிரச்சனையில் பெரிதாக அடிபட்டது நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் தான் . வீடியோ வெளியிட்டதோடு நிற்காமல் இதுதொடர்பான புகாரை நியூஸ் 18 தலைமை நிர்வாகத்திற்கு அனுப்பினார் . இது தொடர்பாக நியூஸ் 18 நிர்வாகம் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் .

நியூஸ் 18 மின்னஞ்சல் முகரவரி மூலம் மாரிதாஸுக்கு ஒரு பதில் வந்ததாக கூறி அதை வெளியிட்டார் மாரிதாஸ் . ஆனால் அந்த மின்னசலை அனுப்பியதாக கூறப்படும் நபர் தனது டிவிட்டர் பக்கத்தில் தான் அந்த மின்னஞ்சலை அனுப்பவில்லை என்று கூறினார் .

இது நடந்து 10 நாட்கள் ஆன நிலையில் இன்று தான் மரிதாஸுக்கு எதிராக நியூஸ்18 புகாரளித்ததாக செய்திகள் வெளியானது . அதில் போலி ஈமெயில் வைத்து தவறான தகவலை பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது .

ஆனால் இந்த செய்திக்கு சற்றுமுன் தனது சமூகவலைத்தள பக்கங்கள் மூலம் விளக்கம் அளித்துள்ள மாரிதாஸ் . தான் 10 நாட்களுக்கு முன்பே இது தொடர்பாக புகாரளித்து விட்டதாக கூறி அதற்கான CSR காப்பியை வெளியிட்டுள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு .

“எனக்கு வந்த Email மீது நான் 10 நாட்கள் முன்பே புகார் கொடுத்துவிட்டேன். இப்போது யார் அந்த Email அனுப்பினார் என்பது தான் வழக்கு தவிர மாரிதாஸ் FakeEmail என்று மீண்டும் விசயத்தைத் திசை திருப்ப முயற்சி வீண்.ஆதாரம் இங்கே. Email அனுப்பியவன் பிடிபடுவான். அன்று தெரியும். “

இந்த சூழலில் தமிழின் பிரபல ஊடகம் ஒன்று மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தியை வெளியிட்டு பின்னர் அதை டிலீட் செய்துள்ளது. மேலும் இன்று இரவு 7:30 மணிக்கு இதற்கான விளக்கத்துடன் வீடியோ வெளியிட போவதாகவும் கூறியுள்ளார் .

Click  பல முனைகளில் தாக்குதல் நடத்தும் இந்தியா ! சீனா எவ்வளவு நிலத்தை கைப்பற்றியது ? ஆயுதத்தை குவிக்கும் இந்தியா ! பிரதமர் மோடி உரை

Leave a Reply

Your email address will not be published.