ஆட்டத்தை ஆரம்பித்த அழகிரி ! உடைகிறதா திமுக ? உருவாகிறது பெரும் கூட்டணி ! அதிர்ச்சியில் ஸ்டாலின் !

கருணாநிதியின் வாரிசுகளில் ஒருவரான முக அழகிரி தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிகுந்தவராக திகழ்ந்தார் . இருந்தாலும் அவர் திமுகவிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டார் . ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றே அழகிரியை கட்சியிலிருந்து நீக்கியதாக கூறப்பட்டது .

கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே மீண்டும் திமுகவில் இணைய அழகிரி பல முயற்சிகள் எடுத்தார் ஆனால் அவை பயனளிக்கவில்லை . அவர் இறந்த பின்பும் திமுகவில் அழகிரியால் இணையமுடியவில்லை . ஒருவேளை அழகிரியை கட்சியில் சேர்த்தால் உதயநிதியின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று ஸ்டாலின் அவரை கட்சியைவிட்டு விலக்கியே வைத்துள்ளார் .

இதனால் விரக்தியடைந்த முக அழகிரி திமுகவில் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை இணைத்து ஒரு புதிய கட்சியை துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தென் மாவட்டங்களில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அதிருப்தியில் இருக்கும் திமுக நிர்வாகிகளை ஒன்றிணைத்து புதிய கட்சியை துவங்கி 2021 தேர்தலில் போட்டியிட அழகிரி திட்டமிட்டுள்ளார்

மேலும் இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதிருப்தியில் இருக்கும் திமுக நிர்வாகிகளை தொடர்புகொண்டு பேசும் பணியை அழகிரி துவங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது . மேலும் இந்த தகவல் ஸ்டாலினுக்கு சென்றுள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டாலின் .

திமுக மதுரை மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி மற்றும் மணிகண்டன் ஆகியோரை நேற்று இரவு தொடர்புகொண்டு நிலைமை குறித்து விசாரித்ததுடன் . ஒரு திமுக கவுசிலர் கூட அழகிரி பக்கம் செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது .மேலும் ரஜினி மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வருமாறும் அழகிரிக்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .

நாம் பெரும் கூட்டணியுடன் 2021 தேர்தலை சந்திக்கவுள்ளோம் என்று கூறி திமுகவில் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்க அழகிரி முயற்சித்து வருவதால் . திமுக உடையும் அபாய சூழல் உருவாகியுள்ளது . இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்

இதுபோன்ற பல செய்திகளை பார்க்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளவும் .

Click  மிக பயனுள்ள பதிவு வெறும் ஒரே வாரத்தில் ஆண்களுக்கு மீசை தாடி வளர இத மட்டும் பண்ணுங்க

Source – Tnnews24

Leave a Reply

Your email address will not be published.